இந்திய அணியின் சிறந்த ஓடிஐ/டி20 கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். ஏப்ரல் 3 அன்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரே அவர் கடைசியாக விளையாடிய போட்டியாகும். வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் யுவராஜ் சிங் தனது விக்கெட்டை இம்ரான் தாஹீரிடம் அளித்தார். இந்த போட்டிக்கு பிறகு அவர் எந்த போட்டியிலும் களமிறக்கப்படவில்லை.
யுவராஜ் சிங் கிரிக்கெட் வாழ்வில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திய 2011 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடந்த அதே மைதானத்தில் தற்செயலாக அவர் தனது இறுதி கிரிக்கெட் போட்டியை விளையாடியுள்ளார். அந்த வருடத்தில் தொடர் ஆட்டநாயகன் விருதினை யுவராஜ் சிங் வென்றார், அத்துடன் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.
யுவராஜ் சிங் தனது கடைசி ஐபிஎல் போட்டியை 2019 அன்று விளையாடினார். அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி 2017ல் விளையாடினார். நாம் இந்த கட்டுரையில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் யுவராஜ் சிங்கின் கடைசி போட்டிகளை பற்றி காண்போம்.
டெஸ்ட்: இந்தியா vs இங்கிலாந்து, கொல்கத்தா, அக்டோபர் 16-2003
ஒருநாள்/டி20 கிரிக்கெட்டில் நிறைவான சாதனைகளை படைத்துள்ள யுவராஜ் சிங், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டார். யுவராஜ் சிங் 2003 அக்டோபரில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் 2003 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் நடந்த 40 டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றிருந்தார். 2012ற்குப் பின்னர் இந்திய டெஸ்ட் அணியிலிரேந்து நீக்கப்பட்டார்.
40 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று ஆல்-ரவுண்டர் திறனை வெளிக்கொணர்ந்து 33.22 சராசரியுடன் 1900 ரன்களை குவித்துள்ளார். டெஸ்டில் இவரது சிறந்த ஆட்டத்திறன் பெங்களூருவில் நடந்த பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் வந்ததது. இப்போட்டியில் பாகிஸ்தான் 169 ரன்களை குவித்தார். இவரது இடதுகை சுழற்பந்து வீச்சின் மூலம் டெஸ்டில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
யுவராஜ் சிங் இங்கிலாந்திற்கு எதிரான தனது கடைசி போட்டியில் முதல் இன்னிங்ஸில் 32 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 16 ரன்களையும் அடித்தார். இப்போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இங்கிலாந்து கேப்டன் சர் அலாஸ்டர் குக் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 190 ரன்களை குவித்தார்.
ஓடிஐ: இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள், நார்த் சவுண்ட், ஜீன் 30, 2017
யுவராஜ் சிங்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை மேற்கிந்தியத் தீவுகளில் முடிந்தது. மொகாலியில் அல்ல. யுவராஜ் சிங் இந்திய அணியின் ஒரு அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 304 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இவர் விளையாடியது இதற்கு சான்றாகும். தனது அதிரடியான ஒருநாள் கிரிக்கெட் வாழ்வில் 8701 ரன்களையும், 111 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இவரது இறுதி ஒருநாள் போட்டியில், நம்பர்-4 பேட்ஸ்மேனாக களமிறங்கி 55 பந்துகளில் 39 ரன்களை குவித்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்த போட்டியில், இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்களை எடுத்தார். இந்த இலக்கை துரத்திய மேற்கிந்தியத் தீவுகள் 38.1 ஓவர்களில் 158 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
யுவராஜ் சிங்கின் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டி இதுதான் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இதுவே அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாக அமைந்தது.
டி20ஐ: இந்தியா vs இங்கிலாந்து, பெங்களூரு, 1 பிப்ரவரி 2017
யுவராஜ் சிங்கின் கடைசி சர்வதேச டி20 போட்டி 2017ல் பிப்ரவரி 1 அன்று விளையாடினார். பெங்களூரில் நடந்த தொடரை தீர்மானிக்கும் இந்த போட்டியில் இங்கிலாந்து ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. சுரேஷ் ரெய்னா மற்றும் எம்.எஸ்.தோனி சிறப்பான அரைசதங்களை இந்த போட்டியில் விளாசினர். யுவராஜ் சிங் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 10 பந்துகளில் 27 ரன்களை குவித்து இந்திய அணியின் ரன்களை 200ஆக உயர்த்தினார்.
பின்னர் களமிறங்கிய இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 127 ரன்களில் சுருண்டது. இந்த போட்டியில் யுஜ்வேந்திர சகால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என வென்றது.
யுவராஜ் சிங் இந்த டி20 போட்டியில் 270 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிவேக 27 ரன்களை விளாசியிருந்தாலும், இப்போட்டிக்கு பிறகு இந்திய நிர்வாகம் அவரை கண்டுகொள்ளவில்லை. தற்கால நூற்றாண்டின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச டி20யில் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் 58 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
டி20 உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்த யுவராஜ் சிங்கிற்கு, இறுதியாக ஒரு பிரியா விடை டி20 இல்லாமல் ஓய்வு பெற்றுள்ளார். யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் பயணம் மிகவும் பெரிதானது. யுவராஜ் சிங்கின் கடைசி சர்வதேச டி20யில் ரிஷப் பண்ட் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.