டி20ஐ: இந்தியா vs இங்கிலாந்து, பெங்களூரு, 1 பிப்ரவரி 2017
யுவராஜ் சிங்கின் கடைசி சர்வதேச டி20 போட்டி 2017ல் பிப்ரவரி 1 அன்று விளையாடினார். பெங்களூரில் நடந்த தொடரை தீர்மானிக்கும் இந்த போட்டியில் இங்கிலாந்து ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. சுரேஷ் ரெய்னா மற்றும் எம்.எஸ்.தோனி சிறப்பான அரைசதங்களை இந்த போட்டியில் விளாசினர். யுவராஜ் சிங் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 10 பந்துகளில் 27 ரன்களை குவித்து இந்திய அணியின் ரன்களை 200ஆக உயர்த்தினார்.
பின்னர் களமிறங்கிய இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 127 ரன்களில் சுருண்டது. இந்த போட்டியில் யுஜ்வேந்திர சகால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என வென்றது.
யுவராஜ் சிங் இந்த டி20 போட்டியில் 270 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிவேக 27 ரன்களை விளாசியிருந்தாலும், இப்போட்டிக்கு பிறகு இந்திய நிர்வாகம் அவரை கண்டுகொள்ளவில்லை. தற்கால நூற்றாண்டின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச டி20யில் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் 58 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
டி20 உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்த யுவராஜ் சிங்கிற்கு, இறுதியாக ஒரு பிரியா விடை டி20 இல்லாமல் ஓய்வு பெற்றுள்ளார். யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் பயணம் மிகவும் பெரிதானது. யுவராஜ் சிங்கின் கடைசி சர்வதேச டி20யில் ரிஷப் பண்ட் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.