பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நேற்று நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தித் தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸ்ல் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பட்டேல் சிறப்பான தொடக்கத்தை தந்தார். 9 ஓவர்கள் முடிவில் 81 ரன்களுக்கு 4 விக்கெட் இருந்த நிலையில் டி வில்லியர்ஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். ஆர்.சி.பி. அணி 20 ஓவர் முடிவில் 202 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 17 ஓவரில் 3 விக்கெட்கள் இழந்து 167 ரன்கள் எடுத்து நிலையில் பெங்களூர் அணி சிறப்பாக வீசியதால் வெற்றி பெற்றது.
ஆட்டத்திற்குப் பிறகு கேப்டன் கோலி வெற்றி குறித்து பேசினார். கடந்த ஐந்து போட்டிகளில் நான்காவது வெற்றி பெற்று மகிழ்ச்சியை அனுபவித்து வருகிறோம். இது மேலும் விளையாடவுள்ள லீக் போட்டிகளில் உற்சாகத்தை ஏற்ப்படுத்தும் என்று கோலி கூறினார்.
ஏபிடி மற்றும் ஸ்டோனிஸ் பார்ட்னர்ஷிப்பில் 121 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒரு நல்ல இலக்கை அடைய முடிந்தது. இந்த போட்டியில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை அணிக்கு தந்துள்ளனர். போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையிலும் எங்களது ஆட்டத்தை அனுபவித்து விளையாடி வந்தோம். பஞ்சாப் அணியுடன் முதல் வெற்றிக்கு பிறகு அணி வீரர்கள் மேலும் உற்சாகமடைந்தனர். ஒரு நல்ல அணியை கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நிலையில் மட்டுமே இருந்தோம். ஒரு சிறந்த அணியாக பெங்களூர் அணி இருந்து வருகிறது" என்று கோலி கூறினார்.
ஏபிடி மற்றும் ஸ்டோனிஸ் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்ப்படுத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் 175 ரன்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலையில் கடைசி 3 ஓவரில் 64 ரன்கள் எடுத்து 200+ என்ற கடினமான இலக்கை வைத்தனர்.
அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதற்கு உதவும். வீரர்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்காமல் இருப்பது எந்த ஒரு அணிக்கும் சிறப்பான முடிவை தரும்.
விளையாடும் போது எந்த வித அழுத்தம் இல்லாமல் விளையாடினால் மட்டுமே ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். 6 முதல் 7 பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில் பவுலிங்கில் ஒரு சில குறிப்பிட்ட வீரர்கள் மீது அதிக அழுத்தம் ஏற்ப்பட வாய்ப்பில்லை. ஸ்டோனிஸ் பேட்டிங், பவுலிங் என அணிக்கு சமநிலைகளை தருகிறார்.
முதல் சில போட்டிகளில் பவுலர்கள் சரியாக செயல்படாமல் இருந்தது தோல்விகளுக்கு ஒரு காரணமாக அமைந்தது. தற்போது விளையாடிய கடைசி 3 போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். சென்னை, கொல்கத்தா, பஞ்சாப் அணியுடன் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசியதால் வெற்றி பெற முடிந்தது. பஞ்சாப் அணியுடன் கடைசி 3 ஓவரில் 36 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் வெறும் 18 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். இனி வரும் போட்டிகளில் பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் சிறந்த அணியாக பெங்களூர் இருக்கும்.
எழுத்து – ஐஏஎன்எஸ்
மொழிபெயர்ப்பு – சுதாகரன் ஈஸ்வரன்.