வருகின்ற 2019 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரியமிர் லீக் நடை பெற உள்ளது. இந்த வருடம் இந்தியன் ப்ரியமிர் லீக்கில் பல அதிரடி பேட்ஸ்மேன்கள் ஏலத்தில் கைவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் நட்சத்திர பேட்ஸ்மேன்னான மனோஜ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில் நான் என்ன தவறு செய்தேன் என்னை ஏன் எடுக்கவில்லை என பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா என்றால் அது ஐபிஎல் போட்டிகள் தான். இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் இப்போட்டிகளுக்கான ஏலம் ஏற்கனவே நிறைவடைந்தது.ஒவ்வொரு அணியும் நட்சத்திர பேட்ஸ்மேன்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர்.
2019 ஆம் ஆண்டிற்கான ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்புரில் நடைபெற்றது. இத்தொடரில் பங்கேற்பதற்காக 14 நாடுகளில் இருந்து 1003 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 347 வீரர்களை ஏலப்பட்டியலுக்கு தேர்வு செய்தது ஐபிஎல் நிர்வாக குழு. இதில் தற்போதைய வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட்டை பொறுத்து வீரர்களின் விலை நிர்ணயிக்க பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏலத்தின் முதல் வீரராக வந்த மனோஜ் திவரியை யாரும் வாங்க முன் வரவில்லை. ஏலத்தில் இரண்டாவது வீரராக வந்த புஜராவையும் யாரும் வாங்க முன் வரவில்லை. இவர்களின் அடிப்படை நிர்ணய விலை 50 லட்சமாகும்.
மனோஜ் திவாரி இந்திய அணிக்காக 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 1 சதம் மற்றும் 1அரை சதம் அடித்துள்ளார். அதே போல ஐபில் தொடரில் 98போட்டிகளில் பங்கேற்று 1695 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 11 ஐபிஎல் தொடரில் 10 தொடரில் பங்கேற்று பல்வேறு அணிக்காக விளையாடி உள்ளார்.
இதில் 20 லட்சம் அடிப்படை தொகையிலிருந்த தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தியை கிங்ஸ் லெவன் அணி 8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. சென்னை அணி வருணை ஏலத்தில் எடுக்க முயன்றும் எடுக்க முடியவில்லை. மேலும் மோஹித் சர்மாவை சென்னை அணி 5 கோடிக்கு எடுத்தது.
அது மட்டுமில்லாமல் ருட்டு ராஜ்கைக்வாட் என்ற இளம் வீரரை சென்னை அணி 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. இந்த நிலையில் நட்சத்திர வீரரான மனோஜ் திவரியை எந்த அணியும் எடுக்க முன் வர வில்லை. இதனால் தனது வருத்தத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கொட்டி தீர்த்துள்ளார்.
அவர் கூறியதாவது இந்தியாவிற்காக பல சதங்களை அடித்துள்ளேன். ஆட்டநாயகன் விருதையும் பெற்றுள்ளேன். ஆனாலும் 14 போட்டிகளில் புறக்கணிக்க பட்டேன். 2017 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் ரெய்சிங் புனே சூப்பர்ஜெய்ண்ட் அணிக்காக இவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டு கேப்டன் ஸ்மித் தலைமையிலான ரெய்சிங் புனே சூப்பர்ஜெய்ண்ட் அணி பைனல் வரை சென்று கோப்பை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது. 2017 ஆம் ஆண்டு நடந்த ஐபில் சீசினில் மனோஜ் திவாரி அருமையாக விளையாடி பல அரை சதங்களை அடித்தார். எனினும் அடுத்த சீசினில் அவரை போட்டிகளில் எடுக்காத காரணத்தினால் மிகவும் வருத்தமடைந்த அவர் நான் என்ன தவறு செய்தேன் என்னை ஏன் எந்த அணியும் எடுக்கவில்லை என வருத்தத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு போட்டுள்ளார்.