நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக கோப்பை தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த 12வது உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது. 1975, 1979, 1983 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்தாவது முறையாக உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைப்பெறுகிறது. இந்த ஆண்டு பத்து அணிகள் மோதுகின்றன.
இந்த உலகக் கோப்பை கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 6 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இன்று நடைபெற உள்ள 7வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி மற்றும் இலங்கை அணி மோதவுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்துள்ளது. அதைப்போல இலங்கை அணியும் தனது முதல் போட்டியில் நியூசீலாந்து அணியிடம் தோல்வியை அடைந்துள்ளது. எனவே தோல்வி அடைந்த இரு அணிகளும் இன்று மோதவுள்ளதால் போட்டி விவரங்கள், ஆடும் 11, மற்றும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள அணி பற்றிய தகவல்களை காண்போம்.
போட்டி விவரங்கள் : AFG vs SL
எங்கே : இங்கிலாந்து, கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
எப்போ : ஆப்கானிஸ்தான் எதிராக இலங்கை, CWC19, ஜூன் 4, இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கவுள்ளது, ( 10:30 உள்ளூர், 15:00 IST ).
சோபியா கார்டன்ஸ் : 1967 ஆம் ஆண்டு இந்த மைதானத்தை நிறுவப்பட்டது. இந்த மைதானத்தின் கொள்ளவு 15,000 ஆக இருக்கிறது.
#1.ஆப்கானிஸ்தான்
இந்த ஆண்டு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தை பலம் மிகுந்த அணியான ஆஸ்திரேலியா அணியிடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் போட்டிங் செய்த அப்கானிஸ்தான் அணி 38.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 207 ரன்கள் எடுத்தனர். இதன் பின் களமிறங்கிய அஸ்திரேலியா அணி 209 ரன்களை பெற்று வெற்றி பெற்றது. இதனால் தனது இரண்டாவுது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என ஆப்கானிஸ்தான் அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.
முக்கிய வீரர்கள் :
பேட்டிங் - ரஹ்மத் ஷா, குல்பாடின் நயீப், நஜிபுல்லா ஸ்த்ரான்.
பவுலிங் - ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான்,ஹமீத் ஹசன்
எதிர்பார்க்கப்படும் 11 :
முகமது ஷாஜாத் (wk), ஹஸ்ரதூல்லா சஜாய், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, முகமது நபி, குல்பாடின் நயீப், நஜிபுல்லா ஸத்ரான், ரஷீத் கான், டவ்லத் ஸத்ரான், முஜீப் உர் ரஹ்மான், ஹமீத் ஹசன் / அத்தாப் ஆலம்.
#2.இலங்கை
இலங்கை அணி, சமீப காலமாக, தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. தனது கடைசி 9 ஒரு நாள் போட்டியில் 8-ல் தோல்வியை சந்தித்துள்ளது. உலகக் கோப்பை பயிற்சி போட்டிகளிலும் அந்த அணி, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இந்த உலக கோப்பையில் தனது முதல் போட்டியை நியூசீலாந்து அணியிடம் மோதி இதிலும் தோல்வியை சந்தித்தது. எனவே தனது இரண்டாவது போட்டியில் வெற்றி பெற தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றது.
முக்கிய வீரர்கள் :
பேட்டிங் - குசல் பெரேரா, திமுத் கருணாரட்ன, ஏஞ்சலோ மேத்யூஸ்
பவுலிங் - திஸ்ரா பெரேரா, தனஞ்சயா டி சில்வா, சுந்தர லக்மால்
எதிர்பார்க்கப்படும் 11 :
திமுத் கருணாரட்ன, லஹிரு திமமன்னே, குசால் பெரேரா (விக்கெட்), குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், ஜீவன் மென்டிஸ், திஸ்ர பெரேரா, இசுரு உதான, சுந்தர லக்மால், லசித் மலிங்கா
வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள அணி :
இந்த உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்த இரு அணிகளும் இன்று மோதவுள்ளன. இரு அணிகளையும் ஒப்பிடும் போது ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.