ஐபிஎல் 2019 : ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய 8 வீரர்கள்

.
.

2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் மாதத்தில் துவங்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் சென்ற மாதம் 18-ம் தேதி ஜெய்பூர் நகரில் நடந்தது. 8 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கின.

ஐபிஎல் போட்டி தொடரில் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் இளம் வீரர் கை கோர்த்து தங்கள் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்செல்ல சிறப்பாக விளையாட வேண்டும்.

இந்த தொகுப்பில் எட்டு அணிகளில் உள்ள வீரர்களில் ஆட்டத்தின் போக்கை மாற்ற கூடிய வீரர்கள் பற்றி காண்போம்

#அண்டிரூ டை - கிங்ஸ் லெவன் பஞ்சாப் .

அண்டிரூ டை
அண்டிரூ டை

டி20 போட்டிகளில் வேக பந்துவீச்சாளர்கள் அதிகம் வீசக்கூடிய பந்து நக்கில் பால் (knuckle ball). இதை சிறப்பாக வீசக்கூடிய சிலரில் முக்கியமானவர் அண்டிரூ டை. உள்ளுர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அவர் தற்பொழுது ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அவரை பஞ்சாப் அணி வாங்கியது.14 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்கள் வீழ்த்தி பர்பில் கேப்பை கைப்பற்றினார் டை. சிக்கலான நேரத்தில் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரர்களில் ஒருவரான டை, இந்த ஆண்டும் சிறப்பாக விளையாடி பஞ்சாப் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார் என்று நம்புவோம்.

#ஷிகர் தவான் - டெல்லி கேப்பிடல்ஸ்

ஷிகர் தவான்
ஷிகர் தவான்

நவம்பர் மாதம் ட்ரேட் விண்டோவில் டெல்லி அணி ஷிகர் தவானை ஹைதெராபாத் அணியில் இருந்து வாங்கியது. தான் விளையாடும் அணிக்கு சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தி தருவதில் வல்லவர் தவான்.

தனது முன்னாள் அணியான ஹைதெராபாத் அணியில் 8 சீசன்கள் சிறப்பாக விளையாடியுள்ளார் தவான். மேலும் சென்ற ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்துள்ளார். எனவே,அவரது வருகை டெல்லி அணியின் பேட்டிங்கை முன்னேற்றும் என்று டெல்லி அணி ரசிகர்கள் நம்புகின்றனர்.

#சுனில் நரேன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சுனில் நரேன்
சுனில் நரேன்

சில ஆண்டுகளுக்கு முன் தனது மாயாஜால சுழல் பந்துவீச்சினால் தான் விளையாடும் அணிக்கு வெற்றியை தேடி தந்த நரேன் தற்பொழுது பேட்டிங்கிலும் அசத்திவருகிறார். சமீப காலமாக துவக்க வீரராக களமிறங்கி வேகமாக ரன்களை குவித்துவருகிறார்.

2012 ஆம் ஆண்டு முதல் 98 ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடி 112 விக்கெட் மற்றும் 628 ரன்கள் குவித்துள்ளார்.தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வந்த போதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொல்கத்தா அணியின் துவக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார்

#கிரிஷ்ணப்பா கௌதம் - ராஜஸ்தான் ராயல்ஸ்

கிரிஷ்ணப்பா கௌதம்
கிரிஷ்ணப்பா கௌதம்

சென்ற ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களில் கிரிஷ்ணப்பா கௌதம்மும் ஒருவர். ராஜஸ்தான் அணிக்காக பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் அசத்தி அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற செய்தார்.

அதிரடியாக பேட் செய்து மற்றும் மிடில் ஓவர்களில் விக்கெட்களை வீழ்த்தி சில நேரங்களில் ஆட்டத்தின் போக்கை மாற்றிய கெளதம், இந்த முறையும் சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார் என நம்புவோம்.

#ரஷீத் கான் - சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்

ரஷீத் கான்
ரஷீத் கான்

உலகின் நம்பர் 1 பௌலர் ஆன ரஷீத் கான் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக சன் ரைசர்ஸ் அணியின் முதுகெலும்பாக உள்ளார் . சன் குழுமத்தின் அணியான சன் ரைசர்ஸ் இந்த வருடம் சிறப்பாக செயல்பட ரஷீத் கானின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கக்கூடும்.

2018ஆம் ஆண்டு அதிக டி20 விக்கெட்களை வீழ்த்திய ரஷீத் கான் தற்பொழுது பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி அசத்தி வருகிறார்.

#க்ருனால் பண்டியா - மும்பை இண்டியன்ஸ்

க்ருனால் பண்டியா
க்ருனால் பண்டியா

பாண்டியா சகோதரர்களில் மூத்தவரான க்ருனால், சென்ற வருடம் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கினார். 2016ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக மும்பை அணியால் வாங்கப்பட்ட க்ருனால் பாண்டியா குறுகிய காலத்தில் அந்த அணியின் முக்கிய வீரராக தன்னை நிலை நிறுத்தியுள்ளார்.

39 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 708 ரன்கள் குவித்து 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் க்ருனால். மிடில் ஓவரில் சிறப்பாக பந்துவீசி ரன் வீதத்தை கட்டுப்படுத்துவதில் க்ருனால் பாண்டியா வல்லவர். மேலும் பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாடி குறைந்த நேரத்தில் அதிக ரன் குவிப்பதிலும் க்ருனால் கெட்டிக்காரர்.

#ஏ பி டிவில்லியர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஏ பி டிவில்லியர்ஸ்
ஏ பி டிவில்லியர்ஸ்

சர்வதேச போட்டிகளில் இருந்து 2018ம் ஆண்டு ஓய்வுபெற்ற தென் ஆப்பிரிக்க வீரர் ஏ பி டிவில்லியர்ஸ், ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணிக்காக கடந்த 9 வருடங்களாக விளையாடி வருகிறார் பல போட்டிகளில் தனது அசாத்தியமான பேட்டிங் திறமையினால் பெங்களூர் அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த MSL டி20 போட்டி தொடரின் ஒரு ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 93 ரன்கள் குவித்து அவரது அணியை வெற்றி பெறச் செய்தார் டி வில்லியர்சின் அனுபவம் பெங்களூரு அணிக்கு இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் வெற்றியை தேடித்தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

#டுவைன் பிராவோ - சென்னை சூப்பர் கிங்ஸ்

டுவைன் பிராவோ
டுவைன் பிராவோ

நடப்பு சாம்பியனான சென்னை அணி ஐபிஎல் போட்டி தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு காரணம் அந்த அணியில் உள்ள ஆல்ரவுண்டர்கள் அவர்களில் முதன்மையானவர் டுவைன் பிராவோ . சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிராவோ பல்வேறு டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார்.

ஐபிஎல் போட்டிகளில் ஆயிரத்து 371 ரன்கள் மற்றும் 136 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ள பிராவோ, சென்னை அணி ஐபிஎல் கோப்பையை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள பெரிதும் உதவுவார் என்ற நம்பிக்கையில் சென்னை அணியின் ரசிகர்கள் உள்ளனர்.

எழுத்து : மெஹ்சின் கமல்

மொழியாக்கம் : தினேஷ் சத்யா