12வது உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணிக்கு எதிராக 14வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 36 அடிக்க முடியாமல் தோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் வெற்றி பெற்றது.
இலங்கை அணி இந்த உலகக்கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. 3 போட்டிகளில் தோல்வி அடைந்து 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசீலாந்து அணிக்கு எதிராக விளையாடிய போது 29.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 136 ரன்கள் மட்டும் அடித்தது இதன் பின் களமிறங்கிய நியூசீலாந்து அணி 16.1 ஓவரிலே வெற்றி பெற்றது. மீதமுள்ள இரண்டு போட்டியும் மழை காரணமாக டாஸ் போடாமல் கைவிடப்பட்டது.
போட்டி விவரங்கள்
தேதி: சனிக்கிழமை, ஜூன் 15, 2019
நேரம்: இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கும்.
இடம்: கென்னிங்கடன் ஓவல், லண்டன்
லீக்: 20வது லீக் ஐசிசி உலகக் கோப்பை 2019
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் நெட்வொர்க்
ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஹாட் ஸ்டார்
புள்ளிவிரங்கள்
முதல் இன்னிங்ஸ் சராசரி: 250
இரண்டாம் இன்னிங்ஸ் சராசரி: 217
அதிகபட்ச மொத்தம்: 398/5 (50 Ov) NZ vs ENG
குறைந்தபட்ச மொத்தம்: 103/10 (41 Ov) மூலம் ENG Vs RSA
Highest chased: 322/3 (48.4 Ov) SL Vs IND
Lowest Defended: 260/5 (50 Ov) by AUS vs ENG
அணி விவரங்கள்
இலங்கை அணி
- நுவன் பிரதீப் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் போது காயம் ஏற்பட்டது இதனால் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடமாட்டார் எனும் தகவல் வெளிவந்தது.
- தற்போது இவர் ஓவல் பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். அதனால் அவர் நாளைய போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்
- இலங்கை அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது.
ஆஸ்திரேலியா அணி
- ஆஸ்திரேலியா அணியில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் அதே 11 வீரர்களுடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆஸ்திரேலியா அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது.
முக்கிய வீரர்கள்
ஆஸ்திரேலியா அணி:
- டேவிட் வார்னர்
- கிளன் மேக்ஸ்வெல்
- பாட் கம்மின்ஸ்
இலங்கை அணி:
- குசல் பெரேரா
- குசல் மெண்டிஸ்
- லசித் மலிங்கா
ஆடும் 11 வீரர்கள்:
இலங்கை வீரர்கள்:
குசல் பெரேரா, திமுத் கருணாரத் (கேப்டன்), லஹிரு திரிமன்ன, குசல் மெண்டிஸ், தனஞ்சயன் டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், திஸரா பெரேரா, நுவன் பிரதீப்/ஜீவன் மெண்டிஸ், இசுரு உதானா, சுரங்க லக்மால், லசித் மலிங்கா
ஆஸ்திரேலியா வீரர்கள்:
டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் குவாஜா, ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மாக்ஸ்வெல், ஷான் மார்ஷ், அலெக்ஸ் கேரி, நாதன் கொல்டர் நைல், பாட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன்