2019 உலகக் கோப்பை தற்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கோலாகளமாக நடைப்பெற்று வருகிறது. இதுவரை 30 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று 31வது லீக் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி சவுத்தாம்டன் நகரில் இருக்கும் தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளும் உலகக்கோப்பையில் ஒரு முறை மட்டுமே மோதியுள்ளது. அதிலும் பங்களாதேஷ் அணி வெற்றியை பெற்றது. எனவே, தற்போது பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி விவரங்கள், விளையாடும் 11 வீரர்கள், முக்கிய வீரர்கள் பற்றய தகவல்களை காண்போம்.
போட்டி விவரங்கள் - பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான்
தேதி: திங்கள், 24 ஜூன் 2019
நேரம்: இந்திய நேரப்படி மதியம் 3 அளவில் தொடங்கும்
இடம்: சவுத்தாம்டன், தி ரோஸ் பவுல் மைதானம்
லீக்: 31வது லீக் போட்டி, ஐசிசி உலகக் கோப்பை 2019
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் நெட்வொர்க்
ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஹாட்ஸ்டார்
இடம் புள்ளிவிவரங்கள்
சராசரி 1 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 249
சராசரி 2 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 214
அதிகபட்ச மொத்தம்: 373/3 (50 Ov) ENG vs PAK
குறைந்தபட்ச மொத்தம்: 65/10 (24 Ov) by USA vs AUS
Highest Chased: 306/7 (49 Ov) by NZ vs ENG
Lowest Defended: 251/7 (50 Ov) by ENG vs SL
நேருக்கு நேர் மோதிக்கொண்ட எண்ணிக்கை
ஓட்டுமொத்தம் :
மொத்தம்: 7
பங்களாதேஷ்: 4
ஆப்கானிஸ்தான்: 3
முடிவு இல்லை: 0
உலகக்கோப்பை தெடரில் 2015 ஆம் ஆண்டு ஒரு முறை மட்டும் மோதியுள்ளது. இதில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது.
அணி விவரங்கள்
பங்களாதேஷ் அணி :
- பங்களாதேஷ் அணி மற்றொரு ஸ்பின் பந்துவீச்சாராக மொசாடெக் ஹொசைன் இடம் பெறுவார்.
- முகமது சைபுதீன் இந்த உலகக் கோப்பையில் 9 விக்கெட்கள் பெற்றுள்ளார்.
- அதே சமயம் ரூபல் ஹொசைன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 9 ஓவர்கள் வீசி 83 ரன்கள் கொடுத்துள்ளார்.
- எனவே, நாளைய போட்டியில் இவர்களில் ஒருவர் மட்டும் இடம் பெறுவார்
ஆப்கானிஸ்தான் அணி :
- ஆப்கானிஸ்தான் அணி, இந்த போட்டி முழுவதும் அவர்கள் சில விசித்திரமான மாற்றங்களைச் செய்துள்ளனர்.
- நியூசிலாந்திற்கு எதிராக போட்டியில் முஜீப் உர் ரஹ்மானை வெளியேற்றியது.
- இந்தியாவுக்கு எதிரான ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடினர் மீண்டும் அதே முயற்சியில் அவர்கள் மாறாத அணியைத் தேர்வுசெய்யலாம்.
முக்கிய வீரர்கள் :
பங்களாதேஷ் அணி
- தமீம் இக்பால்
- ஷாகிப் அல் ஹசன்
- முஸ்தாபிஸூர் ரஹ்மான்
ஆப்கானிஸ்தான் அணி
- ஹஸ்ரத்துல்லா ஜசாய்
- முகமது நபி
- ரஷீத் கான்
விளையாடும் 11:
பங்களாதேஷ் அணி - சவுமியா சர்க்கார், தமீம் இக்பால், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், மஹ்மதுல்லா, மொசாடெக் ஹொசைன், மெஹிடி ஹசன், ரூபல் ஹொசைன் / முகமது சைபுதீன், முஷ்ரஃப் மோர்டாசா, முஸ்தாபிஸூர் ரஹ்மான்
ஆப்கானிஸ்தான் அணி - ஹஸ்ரதுல்லா ஜசாய், குல்படின் நைப், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி, அஸ்கர் ஆப்கான், முகமது நபி, நஜிபுல்லா ஸத்ரான், ரஷீத் கான், இக்ரம் அலிகில், அப்தாப் ஆலம், முஜீப் உர் ரஹ்மான்.