2019 ஐ.சி.சி உலகக் கோப்பை தொடர் கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணி வீரர்களும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சாதனைகளை படைத்து வருகின்றனர். 45 லீக் போட்டிகளில் இதுவரை 39 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 40 வது லீக் போட்டியில், இந்திய அணியும் பங்களாதேஷ் அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்பாஸ்டன் மைதானத்தில் மோதவுள்ளனர். இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் பயங்கர வடிவத்தில் உள்ளனர், ஆனால் பங்களாதேஷ் அணி 7 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றியை பெற்று அரையிறுதிக்கு கடுமையாக போராடி வருகின்றனர். பங்களாதேஷ் அணி புள்ளிபட்டியலில் 7 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் உள்ளது.
இந்திய அணி தற்போது 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றள்ளனர். இந்திய அணி மழையால் ஒரு போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை அடைந்தனர். இருப்பினும் அந்த போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார். எனவே, இந்திய அணி இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெற்று தங்களது வெற்றியை தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பங்களாதேஷ் இந்த போட்டியில் இந்த போட்டியில் வெற்றியைப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பங்களாதேஷ் அணியில் நட்சத்திர வீரரான ஷகிப் அல் ஹாசன் இருக்கும் வரை அதிக வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது இன்று நடக்கவுள்ள போட்டி விவரங்கள், அணி விவரம், விளையாடும் 11 வீரர்கள் பற்றியை தகவல்களை காண்போம்.
போட்டி விவரங்கள் - இந்தியா vs பங்களாதேஷ்
தேதி: செவ்வாய் கிழமை, 2 ஜூலை 2019
நேரம்: 03:00 PM (இந்திய நேரப்படி)
இடம்: எட்க்பாஸ்டன் மைதானம், பர்மிங்காம்
லீக்: 40வது லீக் போட்டி, ஐசிசி உலகக் கோப்பை 2019
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் நெட்வொர்க்
ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஹாட்ஸ்டார்
இடம் புள்ளிவிவரங்கள்:
சராசரி 1 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 229 ரன்கள்
சராசரி 2 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 183 ரன்கள்
அதிகபட்ச மொத்தம்: 408/9 (50 Ov) ENG vs NZ
குறைந்தபட்ச மொத்தம்: 70/10 (25.2 Ov) AUS vs ENG
Highest Chased: 280/4 (53.3 Ov) by AUS vs ENG
Lowest Defended: 129/7 (20 Ov) by IND vs ENG
உலகக் கோப்பையில் நேருக்கு நேர் மோதிய எண்ணிக்கை
இந்திய அணி மற்றும் பங்களாதேஷ் அணிகள் உலகக் கோப்பை வரலாற்றில் மொத்தமாகவே 3 போட்டிகளில் தான் சந்தித்து உள்ளது. இதில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றியை பெற்று முன்னிலையில் உள்ளது. பங்களாதேஷ் அணி 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர்.
அணி விவரங்கள்
இந்திய அணி
- காலில் காயம் காரணமாக விஜய் சங்கர் உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் இடம் பெறுகிறார்
- விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடியதால் மீண்டும் அணியில் இடம்பெறுவார்.
- இந்திய அணியின் தற்போதைய பேட்டிங்கில் சொதப்பல் காரணமாக ரவேந்திர ஜடேஜா இடம்பெறுவார். சஹால் அல்லது குல்திப் யாதவ் இருவருள் ஒருவர் வெளியேறுவார்கள்.
- இந்திய அணி புள்ளி பட்டியலில் 11 புள்ளிகளை பெற்று இர்ணடாவது இடத்தில் உள்ளது.
- வீரர்கள் - விராட் கோலி (கேப்டன்), ஜஸ்பிரீத் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், ரிஷாப் பண்ட், ரோகித் சர்மா, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் , புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, குல்திப் யாதவ்.
பங்களாதேஷ் அணி
- பங்களாதேஷ் அணியில் நட்சத்திர வீரரான ஷகிப் அல் ஹாசன் மீண்டும் தனது திறமையை இந்தியாவிடம் நிறுபிப்பார்.
- வலுவான இந்திய பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்த பங்களாதேஷ் அணி கூடுதல் பந்து வீச்சாளரை களமிறக்கக்கூடும்.
- பங்களாதேஷ் அணி புள்ளிபட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.
- வீரர்கள் - மஷ்ரஃப் மோர்டாசா (கேப்டன்), அபு ஜெயத், லிட்டன் தாஸ், மஹ்முதுல்லா, மெஹிடி ஹசன், முகமது மிதுன், முகமது சைபுதீன், மொசாடெக் ஹொசைன், முஷ்பிகுர் ரஹீம், முஸ்தபீசுர் ரஹ், சவுமியா சர்க்கார், தமீம் இக்பால், ரூபல் ஹொசைன், சப்பீர் ரஹ்மான், ஷாகிப் அல் ஹசன்.
நட்சத்திர வீரர்கள்
இந்திய அணி
- விராட் கோலி
- ரோகித் சர்மா
- ஜாஸ்பிரிட் பும்ரா
பங்களாதேஷ் அணி
- தமீம் இக்பால்
- ஷகிப் அல் ஹாசன்
- முஷ்பிகுர் ரஹீம்
விளையாடும் 11 வீரர்கள்
இந்திய அணி - ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷாப் பண்ட், கேதார் ஜாதவ், எம்.எஸ் தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா
பங்களாதேஷ் அணி - தமீம் இக்பால், சவுமியா சர்க்கார், ஷாகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம் , லிட்டன் தாஸ், மஹ்முதுல்லா, மொசாடெக் ஹொசைன், முகமது சைபுதீன், மெஹிடி ஹசன், மஷ்ரஃப் மோர்டாசா, முஸ்தாபிஹீீஹிரா