சுழற்பந்து வீச்சாளர்களுள் ரஷீத் கானின் பௌலிங்கை எதிர்கொள்ள மட்டும் எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது - மேக்ஸ்வெல்

Maxwell
Maxwell

ஜீன் 1 அன்று ஆப்கானிஸ்தானிற்கு எதிரான தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ளது ஆஸ்திரேலியா. இதில் ரஷீத் கான் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் இடர்பாட்டினை ஏற்படுத்தும் வகையில் பந்து வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து முறை உலக சேம்பியனாக வலம் வந்த ஆஸ்திரேலிய அணி இவ்வருட உலகக் கோப்பை தொடரையும் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கு காரணம் கடந்த சில போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்டிங். இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணியை சாதரணமாக எண்ணி விடக் கூடாது. ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பையில் இடம்பெற்றுள்ள எந்த அணியை வேண்டுமானலும் தோற்கடிக்கும் வகையில் திகழ்கிறது. இதற்கு சான்றாக முதல் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ஆசிய அணிகளுக்கு எதிராக வலிமையுடன் திகழும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது ஆப்கானிஸ்தான்.

ஆஸ்திரேலிய அணியினர் ரஷீத் கானின் பந்துவீச்சில் தடுமாறி வருகின்றனர். ரஷீத் கான் தற்போது உலகின் நம்பர் 1 லெக் ஸ்பின்னராக வலம் வருகிறார். தனது அற்புதமான சுழலால் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சாதரணமாக வீழ்த்தி விடுகிறார். அத்துடன் முன்னாள் சேம்பியன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே, ரஷீத் கானின் பந்துவீச்சை எதிர்கொள்ள தனக்கும், தன்னுடைய அணியின் சக வீரர்களுக்கும் மிகுந்த சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

தனது கிரிக்கெட் வாழ்வில் ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷீத் கான் வீசுகின்ற பந்தை எதிர்கொள்ளவது மிகவும் கடினமான விஷயம். அவரது சுழற்பந்து வீச்சை போன்று இதற்கு முன் தான் எதிர்கொண்டது இல்லை என "ஹார்ட் ஹிட்டர்" பேட்டிங் ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வலைதளத்திற்கு அளித்த நேர்காணலில் மேக்ஸ்வெல் கூறியதாவது,

"நான் எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் இளம் வீரர் ரஷீத் கான். இவரது பந்து வீச்சை எதிர்கொள்ள மிகவும் கடினமாக உள்ளது. தனது சுழற்பந்து வீச்சில் பேட்ஸ்மேன்களை கதி கலங்க விடுகிறார்."

மேலும் மேக்ஸ்வெல் கூறியதாவது,

ரஷீத் கான் மற்றும் சுனில் நரைன் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை, பேட்ஸ்மேன்கள் கணித்து பொறுமையாக விளையாடி விடலாம் என்று நினைத்தால் அது கண்டிப்பாக முடியாது. ஏனெனில் பேட்ஸ்மேனின் மனநிலையை புரிந்து கொண்டு அதற்கு எதிர் மாறாக வீசும் திறமை உடையவர்கள் இவர்கள். சற்று தாழ்வாக இடப்பக்கமாக இவர்களது பந்துவீச்சை திருப்பி விட நினைத்தால் பந்து பேட்ஸ்மேனின் தலைக்கவசம் மீது தாக்குகிறது. உலகக் கோப்பையில் ரஷீத் கானின் பந்து வீச்சில் விக்கெட்டுகளை விட்டுக் கொடுக்காமல் நன்றாக விளையாட முயற்ச்சி செய்வேன்‌. அத்துடன் இவரது பந்துவீச்சில் சிறப்பான ரன்களை குவிப்பேன்.

2015 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரராக மேக்ஸ்வெல் திகழ்ந்தார். பிக்பேஸ் டி20 தொடரில் ரஷீத் கானின் பௌலிங்கை எதிர்கொண்ட அனுபவம் மேக்ஸ்வெல்-ற்கு உலகக் கோப்பையில் கைகொடுக்கும். ஆப்கானிஸ்தானின் மற்ற பௌலர்களை சிறப்பான முறையில் எதிர்கொண்டால் கண்டிப்பாக ரஷீத் கானிற்கு தடுமாற்றம் ஏற்படும் என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

"மற்ற பௌலர்களின் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரஷீத் கானின் லென்த் பௌலிங்கிற்கு தடுமாற்றத்தை ஏற்படுத்துவேன்‌. பிக்பேஸ் டி20 லீக்கில் ரஷீத் கானிற்கு எதிராக நான் விளையாடி உள்ளேன். அந்த அனுபவம் என்னிடம் சிறிது உள்ளது.
இவரது பந்துவீச்சை காணொளியில் கண்டு எவ்வாறு ரஷீத் கானிற்கு எதிராக பேட்டிங் செய்ய வேண்டும் என்று பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இருப்பினும் ரஷீத் கான் என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் எதிர்கொண்ட மிகச்சிறந்த சுழற் பந்துவீச்சாளர் ஆவார்.

Quick Links