சமீபத்தில் நடந்து முடிந்த உலககோப்பை தொடரில் விஜய் ஷங்கர் காயம் காரணமாக வெளியேற அவருக்கு பதிலாக மாற்று வீரராக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் துருதிஷ்டவசமாக அவர்க்கு ஒரு போட்டியில் கூட களமிறங்க வாய்ப்பு கிடைக்கவே இல்லை. டெஸ்ட் போட்டிகளிலும் ஆரம்ப காலங்களில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டே வந்தது. அதன் பின் வழங்கபட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி ரன்களை குவித்து எவராலும் நீக்க முடியாத நிரந்தர இடத்தினை அணியில் பிடித்தார்.
முதல்தர போட்டிகளில் இவரின் அபார ஆட்டமே இவரை இந்திய அணியில் இடம் பிடிக்க வைத்தது. முதல்தர போட்டிகளில் இவர் 4087 ரன்கள் குவித்துள்ளார். இவற்றின் சராசரி 49.27. இதில் 12 சதங்களும் அடங்கும். இதேபோல உள்ளூர் போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிகபட்ச ரன் குவித்த வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார். 2017-18 ஆம் ஆண்டுகளில் இவர் குவித்த ரன்கள் 2141. கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் தனது திறமையை இவரே நிரூபித்து வருகிறார்.
2015-ல் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் தென்னாபிரிக்க ஏ அணிக்கெதிரான போட்டில் இந்திய அணிக்காக 176 ரன்கள் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதேபோல 2018 விஜய் ஹசாரே தொடரில் 723 ரன்கள் குவித்து அசத்தினார். இவ்வாறு தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் தன்னால் ஒருநாள் போட்டிகளிலும் ஜொலிக்க முடியும் என நிருபித்துள்ளார். எனவே மற்ற வீரர்களுக்கும் கொடுக்கும் வாய்ப்புகளை இவருக்கும் கொடுக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு சிறந்த துவக்க வீரராக இவர் அமைய வாய்ப்புள்ளது.