ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டி-20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் இந்திய அணிக்கு முக்கியமான தொடராக கருதப்படுகிறது. என்னென்றால் இந்த தொடரை தான் உலக கோப்பை தொடருக்கான முன்னேட்டமாக பார்க்கபடுகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் அனைவரும் இடம்பெற வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி வாரியம் கருதுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை கடந்த 15ம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட இருந்த இந்திய அணி கேப்டன் கோலி மீண்டும் அணிக்கு திரும்பினார். ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் ரோஷித், தவான், தோனி, பும்ரா என அனைத்து முக்கிய வீரர்களும் அணியில் இடம் பெற்றிருந்தனர். அதே போல் மூன்று டி-20 போட்டிகான இந்திய அணியில் அதே முன்னனி வீரர்கள் இடம்பெற்றிருந்த நிலையில் குல்திப் யாதவுக்கு பதில் இந்திய அணியின் புதிய இளம் வீரர் மயங்க் மார்க்கண்டே இடம் பிடித்தார்.
இவர் கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடியவர். கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக எலத்தில் எடுக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியிலேயே மும்பை அணியில் இடம் பிடித்து சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் அனைவருக்கும் ஆச்சிரியம் அளிக்கும் வகையில் தோனியின் விக்கெட்டை எளிதில் வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் ஐபிஎல் போட்டியில் மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய மயங்க் மார்கண்டே கடந்த ஐபிஎல் தொடரில் 15 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இவர் சிறந்த பவுளாராக ஐபிஎல் தொடரின் போதே அறியப்பட்டார்.
21 வயதுடைய மயங்க் மார்க்கண்டே பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பதிண்டா ஊரை சேர்ந்தவர். இவர் ஆரம்ப காலங்களில் பஞ்சாப் அணிக்காக உள்ளுர் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவரின் ஆட்டத்தின் திறமையால் கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் எலத்தில் 20 லட்சத்திற்கு மும்பை அணி எலத்தில் எடுத்து முதல் போட்டியில் வாய்ப்பளித்தது. இவரின் ஆட்ட திறமையால் இளம் வயதிலேயே இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இவர் இந்திய அணியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியில் இடம் கிடைத்தது குறித்து பேசியுள்ள மயங்க் மார்க்கண்டே “இவ்வளவு சீக்கிரம் இந்திய அணியில் விளையாடுவேன் என நினைத்துகூட பார்க்கவில்லை. இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமான வாய்ப்பு எனவும் திறமையை நிருபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பாக கருதுகிறேன்" என்றார்.
இவர் இடது கை சுழல் பந்துவிச்சாளர் என்பதால் இந்திய அணியில் குல்திப் யாதவ் இடம் பெறதா நிலையில் க்ருநாள் பாண்டிய அல்லது மயங்க் மார்க்கண்டே அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.