ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்துவது இங்கிலாந்தின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்

Ashes trophy
Ashes trophy

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது.

முதல் டெஸ்டில் அபாரமாக ஆடி 2 சதங்களை அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடித் தந்த ஸ்டீவ் ஸ்மித் ரன்கள் குவிப்பதை எவ்வாறு தடுப்பது என்னும் கேள்விக்கு இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் என்னும் விடை தேடி கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மெர்வ் ஹியூஸ் கூறுகையில் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது டெஸ்டில் ரன்களை எடுக்க கூடாது என இங்கிலாந்து வீரர்களை வேண்டுவார்கள் என கூறினார்.

Steve Smith
Steve Smith

இதனைப் பற்றி அவர் கூறுகையில்

" ஸ்டீவ் ஸ்மித் ஒரு நல்ல பந்தை ஆடாமல் மரியாதை அளித்து அடிக்கக் கூடிய பந்துகளை மட்டும் ஆடுவார். இந்த ஆட்ட முறை முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு மிகவும் நெருக்கடியை கொடுத்தது. அவரது விக்கெட்டை எப்படி வீழ்த்துவது என்று தெரியாமல் குழம்பிப் போனார்கள். "

Merv Hughes
Merv Hughes

" அவர்கள் ஸ்டம்பிற்கு வெளியே பந்து வீசும் பொழுது, அவர் குறுக்கே நடந்து அதை இடது புறமாக தட்டி விடுகிறார். பந்தை ஸ்டம்பிற்கு நேராக போடும் பொழுது அவர் எந்தவித அசைவம்வு காண்பிக்காமல் பந்தை நேர் திசையில் அடிக்கிறார். அவரின் இந்த ஆட்டம் முறையினால் அவரது விக்கெட்டை எடுப்பது மிகவும் கடினமான செயலாகும். எனவே இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் லார்ட்ஸ் மைதானத்தில் அவரது விக்கெட்டை ஆரம்பத்திலே எடுக்க முயற்சிக்க வேண்டும். அப்படி எடுக்க வில்லை என்றால் அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டும். "

இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதன்முறையாக ஒரே டெஸ்டில் இரண்டு சதங்களை அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். பந்தை சேதப்படுத்திய சர்ச்சைக்கு பிறகு ஸ்டீவ் ஸ்மித் ஆடிய முதல் டெஸ்ட் இது என்பது குறிப்பிடத்தக்கது.திரும்ப வந்த முதல் போட்டியிலே ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவிருக்கிறது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் முதல் டெஸ்டில் ஆடிய ஜேம்ஸ் பாட்டின்சன் இரண்டாவது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார்.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா பின்வரும் 11 வீரர்கள் களம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மத்தேயு வேட், டிம் பெயின், பாட் கம்மின்ஸ், பீட்டர் சிடில், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லியோன்.

இங்கிலாந்து அணி பின்வரும் 11 வீரர்கள் களம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ரோரி பர்ன்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட், ஜோ டென்லி, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட்

ஆஸ்திரேலியா அணி இரண்டாவது டெஸ்டை வென்று 2-0 தொடரில் முன்னிலை வகிக்க போராடும் என எதிர் பார்க்கலாம்.

App download animated image Get the free App now