..
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் இந்தியா விளையாடி வருகிறது முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 303 ரன்கள் குவித்தது. புஜாரா அபாரமாக ஆடி தனது மூன்றாவது சதத்தை இந்த தொடரில் அடித்தார். புஜாரா இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்ப்புடன் இரண்டாம் நாளை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய, சிறிது நேரத்தில் 42 ரன்களுக்கு விகாரி ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் புஜாரா தனது அமைதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். அவர் அரைசதம் அடிக்க 7 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில், லயன் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். இது இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் பார்க்கும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சச்சின் டெண்டுல்கர் 2004 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் 241 ரன்களை அடித்ததை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். அந்த தொடரில் சச்சின் வெளியே போகிற பந்தை கவர் டிரைவ் ஆட முற்பட்டு அவுட்டாகி கொண்டிருந்தார். அதனை சமாளிக்க சிட்னியில் அவர் வெளியே போன எந்த ஒரு பந்தையும் தொடவில்லை. இது கிரிக்கெட் வரலாற்றிலேயே, மனதளவில் ஒரு சிறந்த ஆட்டமாக கருதப்படுகிறது. இதனைப் பற்றி பேசுகையில் மைக்கேல் கிளார்க் கூறியதாவது "டெக்னிக்கலா சச்சினை போன்று ஒரு சிறந்த வீரர் எவருமே இல்லை அவர் பிராட்மேனை விட சிறந்த டெக்னிக்கல் கிரிக்கெட்டர் ஆவார்".
இந்த ஒப்பீடு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் ரசிகர்களுக்கு இக்கருத்து உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2004 ஆம் ஆண்டு சிட்னியில் இந்திய ரன்களைக் குவித்ததைப்போல், இன்றும் இந்திய அணி மூன்றாவது முறையாக சிட்னியில் 600 ரன்களுக்குமேல் குவித்தது. அபாரமாக ஆடிய ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார். ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஏழாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் 200 ரன்களுக்கு மேல் குவித்த முதல் ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர். ரவீந்திர ஜடேஜா 81 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இந்தியா 622/7 எடுத்திருந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்னிங்சை டிக்ளேர் செய்தார். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி குவித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
டெஸ்ட் வரலாற்றில் 600 ரன்களுக்கு மேல் அடித்த எந்த அணியும் அந்தப் போட்டியில் தோல்வி பெற்றதில்லை. தொடரில் 2-1 முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி இந்த போட்டியை டிரா செய்தாலே ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றும். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் ஏதும் இழக்காமல் 24 ரன்களை குவித்தது. இதே நாளில் 2004 ஆம் ஆண்டில் இந்திய அணி இதே மைதானத்தில் 700 ரன்களுக்கு குவித்தது குறிப்பிடத்தக்கது. அந்த டெஸ்டில் தான் இந்திய அணியின் நட்சத்திர வீரர், சச்சின் டெண்டுல்கர் புகழ்பெற்ற 241 ரன்களை அடித்தார்.