உலகின் தலைசிறந்த தொடக்க வீரர் ரோகித் சர்மா தான் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் புகழ்ந்துள்ளார். நமது இந்திய அணியின் துணை கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவை பற்றி மைக்கேல் கிளார்க் கூறியதை இங்கு விரிவாக காண்போம்.
ரோகித் சர்மாவிற்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் இது வரை கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை படைத்துள்ளார். சமீபத்தில் கூட ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதுமட்டுமின்றி ஒரு நாள் போட்டியில் 3 முறை இரட்டை சதம் அடித்து பெரிய சாதனையை தன் வசம் வைத்துள்ளார். ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையையும் இவர் வைத்துள்ளார். மேலும் ஒரே இன்னிங்சில் அதிக பௌண்டரி அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவ்வாறு பல சாதனைகளை படைத்துள்ளார் ரோகித் சர்மா.
கடந்த ஐந்து வருடங்களில் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியவர் ரோகித் சர்மா தான். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இந்தியா ஏற்கெனவே டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் ரோகித் சர்மா 133 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது போட்டியிலும் 42 ரன்கள் அடித்தார். இவ்வாறு அனைத்து போட்டிகளிலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வருகிறார் ரோகித் சர்மா.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ரோகித் சர்மாவை பற்றி கூறியது என்ன என்றால், என்னை பொருத்தவரை உலகின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தான். அவர் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணி என்று சமீபத்தில் ஒரு பட்டியலை வெளியிட்டு இருந்தார் மைக்கேல் கிளார்க். அந்தப்பட்டியலில் ரோகித் சர்மாவின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். ரோகித் சர்மாவின் பெயர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவ்வாறு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ரோகித் சர்மாவை பற்றி புகழ்ந்துள்ளார்.
அதுமட்டுமின்றி 2015 உலகக் கோப்பைக்கு பின்னர் ரோகித் சர்மா 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த 60 போட்டிகளில் ரோகித் சர்மா அடித்த ரன்கள் 3410 ஆகும். இவரது சராசரி 66.86 ஆகும். இந்த 60 ஒரு நாள் போட்டிகளில் 15 சதங்களும் 12 அரை சதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருநாள் போட்டிகளில் தலை சிறந்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முதல் இடத்தில் நம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் இரண்டாவது இடத்தில் நம் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவும் உள்ளனர்.