நடந்தது என்ன?
தற்போதைய நடைபெறவிருக்கும் 2019 உலகக் கோப்பைக்கான தனது கலப்பு கனவு அணியை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் வெளியிட்டுள்ளார். ஓடிஐ கிரிக்கெட்டின் டாப் 2 பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, மற்றும் ரோகித் சர்மா இந்த கலப்பு XIல் இடம்பெற்றுள்ளனர்.
உங்களுக்கு தெரியுமா...
2019 உலகக் கோப்பை தொடர் மே 30 அன்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்க உள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் இவ்வருட சீசன் மிகவும் சிறப்பான மற்றும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த உலக கோப்பை வரலாற்றில் 14 அணிகளை பங்கேற்க அனுமதிக்கும். ஆனால் தற்போது ஓடிஐ தரவரிசையில் டாப் 10 அணிகள் மட்டுமே உலகக் கோப்பை தொடரில் இடம்பெற செய்துள்ளது. அதனால் ஒவ்வொரு போட்டியும் மிகவும் அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் வசம் ஏற்படுத்தும்.
கதைக்கரு
2019 உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
பிபிசி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியதாவது,
என்னுடைய காலகட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு சிறந்த காலமாக இருந்தது 1992 வருடமாகும். அந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை நான் என்னுடைய இளம் வயதில் கல்லூரி படித்துக் கொண்டிருந்தபோது கண்டேன். 2017 சேம்பியன் டிராபியில் மற்றொரு முறை சிறந்த இங்கிலாந்து அணியை மீண்டும் கண்டுள்ளேன். சேம்பியன் டிராபியில் இங்கிலாந்து அரையிறுதியில் வெளியேறியிருந்தாலும், அந்த தருணத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக இங்கிலாந்து அணிக்கு அமைந்துள்ளது.
மேலும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் 2019 உலக கோப்பையில் இடம்பெற்றுள்ள வீரர்களின் ஆட்டத்திறனை வைத்து தனது கலப்பு XI ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த அணியில் ரோகித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக உள்ளனர். இவர்களை தொடர்ந்து விராட் கோலி மற்றும் பாபர் அஜாம் அடுத்த இரு பேட்ஸ்மேன்களாக இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பங்கில் ஜாஸ் பட்லரை தேர்வு செய்துள்ளார். எம்.எஸ்.தோனியை அவர் கண்டுகொள்ளவில்லை. ஆச்சரியமளிக்கும் விதமாக மற்ற அணிகளில் சிறந்த ஆல்-ரவுண்டர்கள் இருந்தும் பென் ஸ்டோக்ஸை தனது உலகக் கோப்பை அணிகளில் ஆல்-ரவுண்டராக தேர்வு செய்துள்ளார்.
சுழற்பந்து வீச்சில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷதாப் கான் மற்றும் இங்கிலாந்தின் அடில் ரஷித் இடம்பெற்றுள்ளனர். உலகின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை 12வது வீரராக மைக்கேல் வாகன் தேர்வு செய்துள்ளார். பேட் கமின்ஸ், ஜாஸ்பிரிட் பூம்ரா, டிரென்ட் போல்ட் ஆகியோரை வேகப்பந்து வீச்சாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.
மைக்கேல் வாகனின் கனவு XI: ரோகித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, பாபர் அஜாம், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷித், ஷதாப் கான், பேட் கமின்ஸ், ஜாஸ்பிரிட் பூம்ரா, டிரென்ட் போல்ட். 12வது வீரர்: ரஷீத் கான்
அடுத்தது என்ன?
2019 உலகக் கோப்பையின் தொடக்க போட்டியில் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள உள்ளது.