இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்று பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி மூன்று T20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த நிலையில், முதல் T20 போட்டி கடந்த நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி டக்வர்த் லீவிஸ் முறைப்படி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த முதல் T20 போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பில்லி ஸ்டான்லேக் காயம் அடைந்தார். இதை தொடர்ந்து கடந்த நவம்பர் 23ஆம் நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் பில்லி ஸ்டான்லேக் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக கலந்துகொள்ளவில்லை. இவருக்கு பதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கொல்டர் நைல் கலந்துகொண்டு விளையாடினார். இரண்டாவது T20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
மூன்றாவது மற்றும் கடைசி T20 போட்டி வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டி ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி. அது மட்டுமின்றி இந்த போட்டியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வெற்றிப்பெறுவது மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக T20 தொடரை கைப்பற்றலாம்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்பதால், காயம் அடைந்து வெளியேறிய பில்லி ஸ்டான்லேக் அவருக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அவருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அழைப்பு விடுத்துள்ளது.
மிட்செல் ஸ்டார்க் கடைசியாக 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச T20 போட்டியில் விளையாடினர். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா மண்ணில் கடைசியாக 2014ஆம் ஆண்டு சர்வதேச T20 போட்டியில் விளையாடியுள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்காக T20 போட்டியில் விளையாடவுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் நான்கு வருடம் கழித்து T20 போட்டியில் விளையாட உள்ளார்.
மிட்செல் ஸ்டார்க் வருகை குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டி அளித்துள்ளார். "மிட்செல் ஸ்டார்க் வருகை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு பலம் சேர்க்கும். அவருடைய அனுபவம் இந்திய கிரிக்கெட் அணியை சாய்க்க உதவும். அவருடைய பந்து வீச்சு எப்போதுமே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு பலம் தான்" என்று கூறியுள்ளார்.
மேலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கேப்டன் ஆரோன் பின்ச் காயம் அடைந்த பில்லி ஸ்டான்லேக் பற்றி கூறுகையில் "இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்த முதல் T20 போட்டியில் ஷிகர் தவான் அவர்களின் விக்கெட்டை பில்லி ஸ்டான்லேக் எடுத்த விதம் மிகவும் அற்புதம். அதுமட்டுமின்றி அன்றைக்கு தவான் விக்கெட் ஒரு திருப்புமுனையாக இருந்தது. இரண்டாவது போட்டியில் டாஸ் போடுவதற்க்கு சற்று முன் தான் பில்லி ஸ்டான்லேக் காயம் அடைந்தார்" என்று கூறியுள்ளார்.
மூன்றாவது மட்டும் கடைசி T20 போட்டி இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி. தொடரை இழக்காமல் இருக்க இந்திய கிரிக்கெட் அணி இந்த போட்டியை வென்றாக வேண்டும். மிட்செல் ஸ்டார்க் வருகை இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.