ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்னர், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஒரு இளம் பாகிஸ்தான் வீரர், தனது மாய ஜால வித்தையால் ரசிகர்களிடையே மிகவும் பேசுபொருள் ஆனார். அவர் தான் வேகப்பந்து வீச்சாளர் முஹமது அமீர். 2019 உலக கோப்பை தொடரின் முதல் பாதி முடிந்த நிலையில், 15 விக்கெட்களை கைப்பற்றி 14.60 என்ற சராசரியுடன் தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார், முகமது அமீர். மேலும், இவரது பந்துவீச்சு எக்கனாமி 4.76 என்ற வகையில் அமைந்துள்ளது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார்.
இவரது அற்புதமான அறிமுகம்:
தமது 18 வயதிலே முகமது அமீர், சர்வதேச போட்டிகளில் அறிமுகம் கண்டார். 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டார். இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று 9 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்தார். தனது முதலாவது ஒருநாள் தொடரிலேயே அற்புதங்களை படைத்து அமர்க்களப்படுத்தினார். டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் கண்ட பின்னரும் இத்தகைய மாற்றங்களை நிகழ்த்தினார், முகமது அமீர்.
தடைக்கு உள்ளாவதற்கு முன்னர், 15 ஒருநாள் போட்டியில் விளையாடி 25 விக்கெட்களை கைப்பற்றி 24 என்ற பௌலிங் சராசரியை வைத்திருந்தார். அதன்பிறகு, 41 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 50 விக்கெட்களை கைப்பற்றினார். இதனை கருத்தில் கொண்டு உலக கோப்பை தொடரில் சிறப்பாக தனது ஃபார்மை தொடர்ந்து விக்கெட்களை அள்ளி வருகிறார்.
உலகத்தரத்திலான பந்துவீச்சு:
சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியிலும் கூட தனது துள்ளிய தாக்குதலை தொடுத்துள்ளார், முகமது அமீர். வாஹாப் ரியாஸை (எக்கனாமி 6.00) தவிர்த்து அணியில் உள்ள மற்ற பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படாத போதிலும் தான் வீசிய 10 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி ஆச்சரியம் அளித்தார், முகமது அமீர். மேலும், இதுவே இவரது ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சு பதிவாகும். வாசிம் அக்ரமை போல ஸ்விங் பந்துவீச்சு தாக்குதல்களை தொடர்ந்து தொடுத்து வருகிறார், முகமது அமீர்.
இழந்த 5 ஆண்டு சர்வதேச வாழ்கை:
மேற்கூறியது போல, ஸ்பாட் பிக்ஸிங்கால் ஐந்தாண்டு கிரிக்கெட் வாழ்வை இழந்துள்ளார், முகமது அமீர். இருப்பினும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் திரும்பி முக்கிய கட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு பெரும் உதவி புரிந்து வருகிறார். இவரது மாயவித்தையால் பாகிஸ்தான் மற்றும் உலக முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எண்ணற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.