மீண்டும் வந்த முகம்மது ஷமி, கடின உழைப்பு மற்றும் நம்பமுடியாத வெற்றி

முகம்மது ஷமி - இந்திய கிரிக்கெட் வீரர்
முகம்மது ஷமி - இந்திய கிரிக்கெட் வீரர்

இளம் வீரர்களான பங்கஜ் சிங், வருண் ஆரோன், ஜெய்தேவ் உனட்கட், தவால் குல்கர்னி போன்ற பல பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இடம் பெற கடினமாக முயன்றனர். ஒரு இளம் பெங்கால் வீரர் 2013-ஆம் ஆண்டில் தனது முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமானார். மிகக் குறுகியகாலத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் முகம்மது ஷமி இந்தியாவின் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரராக மாறினார். 2012-13-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியுடன் உள்நாட்டு தொடரில் தேர்வு செய்யப்பட்டு, டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அவர் வேகமாகவும், துல்லியமாக வீசும் பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தினார். பின்னர் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துக்கு எதிரான தொடர்களில் வாய்ப்புகள் கிடைத்தது. 2014-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாகப் பந்துவீசினார். கிடைத்த வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார்.

2014-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை முடிந்த பிறகு ஒருநாள் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய வீரர் ஆனார். சச்சின் டெண்டுல்கர் விடைபெற்ற டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அவரது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. 118 ரன்களுக்கு 9 விக்கெட்களை அந்த போட்டியில் எடுத்தார். எந்த ஒரு திருப்பங்கள் இல்லாமல் கதைகள் முடிக்கப்படுவதில்லை, அதே போல ஷமி வாழ்க்கையிலும் மாற்றமும், காயங்களும், தனிப்பட்ட பிரச்சினையிலும் வந்தது. அனைத்தையும் எதிர்கொண்டு கிரிக்கெட்டை நோக்கி அவரது பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

#வெளிநாட்டு தொடர் பரிதாபங்கள்

இங்கிலாந்து தொடரில் ஷமி ஒரு திருப்புமுனை ஏற்ப்படுத்தினார்
இங்கிலாந்து தொடரில் ஷமி ஒரு திருப்புமுனை ஏற்ப்படுத்தினார்

முகம்மது ஷமி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டிருந்தார். அவர் தனது வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தார். அந்த கட்டத்தில் ஒரு கடினமான சோதனையை எதிர்கொண்டார். தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் முறையே 6 மற்றும் 10 விக்கெட்டுகளை எடுத்தார். இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் அவருக்கு ஒரு அதிர்ச்சியை தந்தது. 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகள் சராசரியாக 73.20 இருந்தது. இதன் விளைவாக, அவர் பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் தொடக்க டெஸ்டில் இருந்து ஒதுக்கப்பட்டார். அடுத்த 3 போட்டிகளுக்கு அவர் அணியில் மீண்டும் இணைந்தார். அந்த சுற்றுப்பயணத்தில் 15 விக்கெட்டுகள் சராசரி 35.80. அவர் தனது பழைய பார்மிற்கு வந்தார். 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்தார். அதற்கு காரணம் அவரது விக்கெட் எடுக்கும் திறன் தான்.

#வியக்கத்தக்க உலக கோப்பை 2015

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 2015 உலக கோப்பை
தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 2015 உலக கோப்பை

2014-15-ஆம் ஆண்டுகள் சராசரியான வருடமாக இருந்தாலும் ஷமி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் தலைசிறந்த வீரராக இருந்தார். ஆஸ்திரேலியக்கு எதிரான அரையிறுதி போட்டியை தவிர, அவர் விளையாடிய ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தது 2 விக்கெட்டுகளை எடுத்தார். அந்த ஆட்டத்தில் அவர் 10 ஓவர்களில் 68 ரன்கள் கொடுத்தார். உலகக்கோப்பை தொடரில் 17 விக்கெட்டுகளையும், 17.30 என்ற சராசரி கொண்டு உலகக்கோப்பை தொடரை முடித்தார். 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அவர் இடது முழங்காலில் கடுமையான வலியால் அவதிப்பட்டார் என்று தெரியவந்தது. உலகக்கோப்பை தொடர் முடிவடைந்தபின் அவர் முழங்கால் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு தேவையற்ற பகுதியாக மாறியது.

காயங்களுக்கு பிறகு மீண்டு வந்தார்

உலகக்கோப்பை தொடருக்கு இடையில் அவர் காயம் காரணமாக விலக விரும்பவில்லை. அவர் தொடர்ந்து உறுதியான மனநிலை கொண்டு விளையாடி வந்தார். அறுவை சிகிச்சை முடிந்து ஆறு மாதங்களுக்கு பிறகு, ஷமி மீண்டும் கிரிக்கெட் விளையாடத் துவங்கினார். 2015-ஆம் ஆண்டு விஜய் ஹசாரே, சையத் முஸ்தாக் அலி கோப்பை, தென் ஆப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணம், ஆசிய கோப்பை ஆகிய தொடர்களில் ஓய்வில் இருந்தார். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்தின் இந்திய சுற்றுப்பயணத்தின் நடுவே காயமடைந்தார். இருப்பினும், அவர் தென் ஆப்ரிக்காவின் சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். எந்தவொரு உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் உடற்பயிற்சி காரணமாக மீண்டும் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் யோ-யோ சோதனையில் தோல்வியடைந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரலாற்றுப் போட்டியிலிருந்து வெளியேறினார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் - ஷமின் தொடை எலும்பு பிரச்சினை
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் - ஷமின் தொடை எலும்பு பிரச்சினை

மறுபடியும் அவர் இந்தியா பக்கத்திற்கு திரும்பி வந்தார், இந்த முறை சில உயர்ந்த உடற்பயிற்சிகளுடன். இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் 10 போட்களில் அவர் பங்கேற்றார். இருப்பினும், 2018-ஆம் ஆண்டில் அவர் எதிர்கொண்ட ஒரு பெரிய பிரச்சினை அவரது மனைவி ஹஸின் ஜஹான் அவர் மீது சில கடுமையான குற்றச்சாட்டுகள் கூறினார்.

தற்போது ஷமி மிக நன்றாக விளையாடி வருகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 16 விக்கெட்டுகளை எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரில் அவர் மிகவும் நன்றாக பந்து வீசினார். புவனேஸ்வர் குமாரும் இருவரும் புதிய மற்றும் பழைய பந்தை நன்றாக பகிர்ந்து கொண்டார். 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை எடுத்தார். சராசரி 30.20. 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். இந்த நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர்.

முகம்மது ஷமி & ஜாஸ்ரிட் பும்ரா - இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடர் 2018-19
முகம்மது ஷமி & ஜாஸ்ரிட் பும்ரா - இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடர் 2018-19

பல வாய்ப்புகளும் சவால்களும் அவருக்கு முன்னால் உள்ளன. எல்லா காலத்திலும் இந்தியாவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீரர்களிடையே அவரது பெயரை பதிவு செய்வதற்கான வாய்ப்பு அவருக்கு உள்ளது.

எழுத்து-ரோஷன் வர்மா

மொழிபெயர்ப்பு-சுதாகரன் ஈஸ்வரன்

Quick Links

App download animated image Get the free App now