டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய டெஸ்ட் அணியில் நீங்கா இடத்தில் இருந்து வருபவர் முகமது ஷமி. ஓடிஐ கிரிக்கெட் போட்டிகளில் ஜொலிக்க முடியாமல் சொதப்பி வந்த இவருக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார். இதைத்தொடர்ந்து நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிய முகமது ஷமி தனது அதிரடி பௌலிங்கை வெளிபடுத்தினார். அத்துடன் நியூசிலாந்து தொடரிலும் தனது முழு திறமையை ஒருநாள் போட்டிகளில் நிரூபித்து இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 உலகக் கோப்பையில் இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.
28 வயதுடைய முகமது ஷமி தனது முழங்கால் வலியால் சில காலம் அவதிப்பட்டு வந்தார். பின்னர் தனது ஃபிட்னஸை நிரூபித்து இந்திய அணியில் இடம் பிடித்தார். சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து உடனான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 4-1 என தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய முகமது ஷமி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்றார். அத்துடன் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பௌலர் என்ற சாதனையையும் படைத்தார். இந்த சாதனை நேப்பியரில் நடந்த நியூசிலாந்து உடனான முதல் ஒருநாள் போட்டியில் நிகழ்த்தப்பட்டது.
முகமது ஷமியின் இந்த அசரவேக மாற்றம் அவரது பௌலிங் நுணுக்கத்தில் தெரிகிறது. இவரது பௌலிங் தொடக்கத்தில் பேட்ஸ்மேன்களின் சற்று தாழ்வான திசையை நோக்கி வீசி விக்கெட்டுகளை தேடுவார்.ஆனால் தற்போது இவரது பௌலிங் பேட்ஸ்மேனின் இடப்புறமாக நேர்திசையில் மாற்றியமைத்து வீசுகிறார். முகமது ஷமியின் பௌலிங் கடந்த காலத்தை கொண்டு ஒப்பிடும்போது தற்போது மிகவும் மேம்படுத்தியுள்ளார். ஷமியின் சிறப்பான ரிஸ்ட் பௌலிங் இவரது பந்துவீச்சு இரகசியமாகும். முகமது ஷமி பந்தை.நேராக வீசுவது போல் அவரது கையிலிருநது பந்து வெளியேற்றப்பட்டாலும், பந்து மாற்று திசையில் நேராக செல்வதால் பேட்ஸ்மேன்கள் தடுமாறுகின்றனர்.
தற்போது முகமது ஷமிக்கு தொடக்க ஓவர்கள் அதிகம் வழங்கப்படுகிறது. இவருக்கு முன்பு ஜஸ்பிரிட் பும்ரா தொடக்க ஓவர்களில் தனது சாகசத்தை செய்துகொண்டிருந்தார். ஆஸ்திரேலிய,நியூசிலாந்து ஓடிஐ தொடர்களில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் இந்த பணியை முகமது ஷமி செய்துகொண்டிருந்தார். இவரது சிறப்பான பௌலிங் கடந்த இரு ஓடிஐ தொடர்களிலும் 40 ஓவர்களுக்கு முன்னதாகவே முடித்து கொள்ளப்பட்டது.
2019ல் 7 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள முகமது ஷமி 20.14 சராசரியுடன் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது பௌலிங்கில் எகானமி ரேட் ஒரு ஓவருக்கு 4.98 ஆக உள்ளது. இந்திய அணியில் பும்ரா இல்லாத சமயத்தில் தனது சிறப்பான பௌலிங்கை வெளிபடுத்தினார் முகமது ஷமி. 2019 உலகக் கோப்பை அணியில் முகமது ஷமி இடம்பெற்றால்,முதல் ஏழு பேட்ஸ்மேன் இடம்பெற்று எட்டாவது இடத்தில் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமி மற்றும் 9வது இடத்தில் பும்ராவும் இடம்பெறுவார்கள். 2019 உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணியும் 9 லீக் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். எனவே முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் மற்றும் ஜாஸ்பிரிட் பும்ரா ஆகிய பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
உத்தேச உலகக் கோப்பை அணி: ரோகித் சர்மா,ஷிகார் தவான்,விராட் கோலி, மகேந்திர சிங் தோனி,அம்பாத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக்,கேதார் ஜாதவ்,ரிஷப் பண்ட்/கே.எல்.ராகுல்,ரவீந்திர ஜடேஜா/விஜய் சங்கர்,ஹார்திக் பாண்டியா,புவனேஸ்வர் குமார்,ஜஸ்பிரிட் பும்ரா,முகமது ஷமி,யுவேந்திர சஹால்,குல்தீப் யாதவ்.