சேஸிங் என்றாலே இந்திய அணி தான் வெற்றி பெறும் என்ற நிலைமை உருவாவதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தான். சேஸ் செய்யும்பொழுது சதம் அடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவ்வாறு சேஸ் செய்யும் பொழுது அதிக சதங்களை அடித்த பேட்ஸ்மென்களின் பட்டியலை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
#4) தவான்
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான தவான். சமீபகாலமாக ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் தவான் தான். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடும் சிறப்பை கொண்டவர். இவர் ஒருநாள் போட்டிகளில் இதுவரை 15 சதங்களை விளாசியுள்ளார். அதில் 8 சதங்களை சேஸ் செய்யும்பொழுது அடித்துள்ளார். எனவே சேஸ் செய்யும் பொழுது அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார்.
#3) ரோஹித் சர்மா
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் துணை கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா. இந்திய அணி சேஸ் செய்யும் பொழுது பல வெற்றிகளை கண்டுள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் ரோகித் சர்மா. இவர் தொடக்கத்தில் நிலைத்து நின்று ஆடி பின்பு அதிரடியாக ரன் குவிக்கும் வல்லமை படைத்தவர். இவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 முறை இரட்டை சதங்களை விளாசி உலக சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா இதுவரை ஒருநாள் போட்டிகளில் 22 சதங்களை விளாசியுள்ளார். அதில் 10 சதங்களை சேஸ் செய்யும்போது விளாசியுள்ளார்.
எனவே சேஸ் செய்யும் பொழுது அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் ரோகித் சர்மா.
#2) சச்சின் டெண்டுல்கர்
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட்டில் இதுவரை பல சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை விளாசியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவர்தான்.
சச்சின் டெண்டுல்கர் இதுவரை 49 சதங்களை ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 17 சதங்களை சேஸ் செய்யும்பொழுது விளாசியுள்ளார். எனவே சேஸ் செய்யும் பொழுது அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
#1) விராட் கோலி
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. ரன் மெஷின் என்று அனைத்து கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். அதற்கு முக்கிய காரணம் விராட் கோலியின் சிறப்பான பேட்டிங் தான். சமீப காலமாக இந்தியா மிகப் பலம் வாய்ந்த அணியாக உள்ளது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் விராட் கோலி தான். இவர் இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 39 சதங்களை விளாசியுள்ளார். அதில் 24 சதங்களை சேஸ் செய்யும்பொழுது விளாசியுள்ளார். எனவே சேஸ் செய்யும் பொழுது அதிக சதங்களை விளாசியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் விராட் கோலி.