ஒருநாள் போட்டி, டி20 போட்டி, மற்றும் டெஸ்ட் போட்டி, ஆகிய மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி தலைசிறந்த அணியாகத்தான் திகழ்கிறது.
அதற்கு காரணம் நமது இந்திய அணியில் சிறப்பாக விளையாடி ஓய்வு பெற்ற, மற்றும் தற்போது விளையாடி வரும் திறமையான வீரர்கள் தான். மற்ற அணிகளை காட்டிலும், நமது இந்திய அணியில் தான், அதிக சாதனைகளை படைத்துள்ள வீரர்கள் உள்ளனர். அதிலும் முக்கியமாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் அதிக சாதனைகளைப் படைத்துள்ளனர். இவர்கள் டெஸ்ட் போட்டியிலும் ஒரே வருடத்தில் அதிக சதங்களை அடித்து சாதனையை படைத்துள்ளனர். அதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
#1) சச்சின் டெண்டுல்கர் ( 2010 ஆம் ஆண்டு )
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்துள்ள, சாதனை நாயகனான சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் இவருக்கென்று தனி மரியாதை உண்டு. கோடிக்கணக்கான ரசிகர்களை தனது சிறப்பான விளையாட்டின் மூலம் தன் வசம் ஈர்த்துள்ளார். இவர் டி20 போட்டிகளில் பெரிய அளவிற்கு சாதனைகள் எதையும் படைக்கவில்லை. ஆனால் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி ஆகிய இரண்டு வித கிரிக்கெட் போட்டிகளிலும் பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக டெஸ்ட் போட்டியில் 51 சதங்களையும், ஒருநாள் போட்டியில் 49 சதங்களையும் விளாசி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் 2010 ஆம் ஆண்டு 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் மொத்தம் 7 சதங்களையும், 5 அரை சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) விராட் கோலி ( 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் “ரன் மெஷின்” என்று அழைக்கப்பட்டு வரும் விராட் கோலி. இவர் தனது சிறப்பான விளையாட்டின் மூலம் நாளுக்கு நாள், புதுப்புது சாதனைகளைப் படைத்து முன்னேறிக் கொண்டே வருகிறார். அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலுமே சராசரியான ரன்களை அடித்து கொண்டே வருகிறார். இவர் 2017 ஆம் ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 1059 ரன்களையும், 5 சதங்களையும் விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி 2018 ஆம் ஆண்டு 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 1322 ரன்களையும், 5 சதங்களையும் விளாசியுள்ளார். மேலும் இதே வருடத்தில் இரண்டு இன்னிங்ஸ்களில் டக் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3) வீரேந்தர் சேவாக் ( 2010 ஆம் ஆண்டு )
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் நட்சத்திர வீரரான வீரேந்தர் சேவாக். இவர் 2010 ஆம் ஆண்டு 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் மொத்தம் 1422 ரன்களையும், 5 சதங்ககளையும் விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி இதே வருடத்தில் இரண்டு இன்னிங்களில் டக் அவுட்டும் ஆகியுள்ளார்.