ஐ.பி.எல் 2019 : மனிஷ் பாண்டே, ஜெய்தேவ் உனட்கட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தங்களது ஐ.பி.எல் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளனர்

Unadkat & stokes
Unadkat & stokes

ஐ.பி.எல் 2019ல் தங்களது அணியில் சரியாக விளையாடத வீரர்களை வேறு அணிக்கு மாற்றிக்கொள்ளவும், அணியிலிருந்து ரிலீஸ் செய்யவும் இன்றே கடைசி நாள் என ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்திருந்து.அதன்படி கடந்த சீசனில் அதிக விலை போன வீரர்கள் அந்தந்த அணிகளால் அணியிலிருந்து ரிலீஸ் செய்யப்பட்டுள்ளனர். ஹைதராபாத் அணியிலிருந்து மனிஷ் பாண்டேவும், ராஜாஸ்தான் அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ், யெய்தேவ் உனட்கட் ஆகியோர் அணியிலிருந்து ரிலிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை மும்பையில் இருந்து வந்த செய்தியின் படி கடந்த சீசனில் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போன வீரர்கள் ஒரு சீசனிற்குள்ளாக ரிலீஸ் செய்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹைதராபாத் அணி மனீஷ் பாண்டேவை கடந்த சீசனில் 9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தனர்.அவர் கடந்த ஐ.பி.எல் சீசனில் மொத்தமாக 284 ரன்கள் எடுத்தார்.அவருடைய ஆட்டத்திறன் நன்றாக இல்லாததால் சில போட்டிகளில் பென்ஜிலும் உட்காரவைக்கப்பட்டார்.

ஏலத்தின் பின்னணி

Manish pandey
Manish pandey

ஐ.பி.எல் 2018 ஏலத்தில் சில அணிகள் சில கிரிக்கெட் வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு அதிக விலைக்கு வாங்கினர்.அதன்படி அதிக தொகை‌யில் ஏலம் போன வீரர்கள் கே.எல்.ராகுல்,பென் ஸ்டோக்ஸ், உனட்கட், மனிஷ் பாண்டே மற்றும் சிலர்.., கே.எல்.ராகுல் பஞ்சாப் அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.ஆனால் மனிஷ் பாண்டே, பென் ஸ்டோக்ஸ், உனட்கட் போன்றோர் அதிக விலைக்கு விலை போனாலும் தங்களது ஆட்டத்திறனை சரியாக வெளிபடுத்தவில்லை.

2017 மற்றும் 2018 ஆகிய இரு ஐ.பி.எல் சீசனிலும் மிகவும் அதிக தொகைக்கு ஏலம் போன வீரரான பென் ஸ்டோக்ஸ் கடந்த சீசனில் மொத்தமாக 196 ரன்களும் , 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்.சர்வதேச போட்டிகள் இருப்பதனால் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல் சீசன் முடிவதற்குள் தனது நாட்டிற்கு சென்றுவிட்டார்.2019 ஐ.பி.எல் சீசனிலும் முக்கியமான போட்டிகளில் விளையாடமல் உலகக்கோப்பைக்கு தயாராவதற்கு தனது நாட்டிற்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது.

ஜெய்தேவ் உனட்கட் 2017ல் சிறப்பாக பந்து வீச்சை மேற்கொண்டு சர்வதேச அணியில் இடம் பிடித்தார்.மேலும் 2018 ஐ.பி.எல் சீசனில் 11.5 கோடிக்கு ஏலம் போனார்.ஆனால் இந்த சீசன் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. மொத்தமாக 11 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். இதனால் சர்வதேச அணியிலிருந்தும் கழட்டிவிடப்பட்டார்.மேலும் 2019 ஐ.பி.எல் சீசனிலும் ராஜஸ்தான் அணியிலிருந்தும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்தது என்ன ?

கிரிக்கெட்டில் வாய்ப்பு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்.மனீஷ் பாண்டே,ஜெய்தேவ் உனட்கட்,பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் 2019 ஐ.பி.எல் ஏலத்தில் புதிய அணிக்கு செல்லப் போகின்றனர்.ஐ.பி.எல் போட்டிகளில் நன்றாக விளையாடினால் அதிகவிலைக்கும், நன்றாக விளையாடவிட்டால் அணியிலிருந்து நீக்கம் செய்வதும் இயற்கையான ஒன்றாகும்.

ராஜாஸ்தான் அணி அதிக நம்பிக்கையுடன் பென் ஸ்டோக்ஸ், உனட்கட் ஆகியோரை அதிக ஏலத்தொகைக்கு எடுத்தது.ஆனால் அவர்களுடைய மோசமான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.இதே வித்தையை ஹைதராபாத் அணி கையாண்டு மனிஷ்பாண்டேவை எடுத்து மோசமான ஆட்டத்தால் ஏமாற்றம் அடைந்தனர்.ஆனால் அப்பாதிப்பு ஹைதராபாத் அணியை அவ்வளவாக பாதிக்கவில்லை.ஹதராபாத் அணியால் இறுதிப்போட்டி வரை தகுதி பெற முடிந்தது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி 2018ஆம் ஆண்டின் ஐ.பி.எல் சீசனில் வெற்றி வாகை சூடியது.

Quick Links