உலக கோப்பை தொடரானது இந்த வருடம் மே மாதத்தின் இறுதியில், இங்கிலாந்து நாட்டில் தொடங்க உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற முன்னணி நாடுகள் பங்கேற்க உள்ளனர். இந்திய அணி மிக பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. அதற்கு காரணம் இந்திய அணியில் விளையாடும் திறமையான வீரர்கள் தான். உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் மிக முக்கியமான வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#5) குல்தீப் யாதவ்
சமீபகாலமாக குல்தீப் யாதவ் நமது இந்திய அணியில் நிரந்தர பந்து வீச்சாளராக இடம் பெற்றுள்ளார். அதற்கு காரணம் அவரது சிறப்பான பந்து வீச்சு தான். இவர் அனைத்து போட்டிகளிலுமே சராசரியான விக்கெட்டுகளை கைப்பற்றுவது மட்டுமின்றி, ரன்களையும் கட்டுப்படுத்துகிறார். உலகக் கோப்பை தொடரில், இந்திய அணிக்கு விளையாட உள்ள மிக முக்கியமான சுழற்பந்து வீச்சாளர் இவர்தான்.
#4) மகேந்திர சிங் தோனி
தற்போது நமது இந்திய அணியில் மிக அனுபவம் வாய்ந்த வீரர் என்றால் அது தோனி மட்டும் தான். தோனியின் தலைமையில் தான் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில், இந்திய அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், இந்த வருடம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி தோனியைத் தவிர, சிறந்த விக்கெட் கீப்பர் யாரும் நமது இந்திய அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் விக்கெட் கீப்பர்கள் தான். ஆனால் இவர்கள் இந்திய அணியில் குறைந்த போட்டிகளில் தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளனர். எனவே தோனியை காட்டிலும் இவர்களுக்கு அனுபவம் சற்று குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
#3) ஜஸ்பிரிட் பும்ரா
தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நம்பர்-1 டெத் பவுலர் என்றால், அது பும்ரா தான். இந்தியா அணி, மிக பலம் வாய்ந்த அணியாக கருதப்படுவதற்கு முக்கிய காரணங்களில் இவரும் ஒருவர். இந்திய அணி குறைவான ரன்களை அடித்தாலும், அந்த ரன்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்துவதில் வல்லவர். நமது இந்திய அணியின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் இவர்தான்.
#2) ரோகித் சர்மா
ரோகித் சர்மா தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தால் மட்டுமே, இந்திய அணி பெரிய இலக்கை எட்ட முடியும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமாகும். தொடக்கத்தில் நிலைத்து நின்று விளையாடுவார். பின்பு அதிரடியாக விளையாட கூடிய திறமை படைத்தவர் ரோகித். நமது இந்திய அணியில் மிக முக்கிய பேட்ஸ்மேன் இவர்தான்.
#1) விராட் கோலி
தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நம்பர்-1 பேட்ஸ்மேன் என்றால் அது விராட் கோலி தான். சமீப காலமாக பல சாதனைகளை முறியடித்து கொண்டே வருகிறார் விராட் கோலி. அனைத்து போட்டிகளிலுமே சராசரியான ரன்களை அடித்து வருகிறார். அதனால் தான் கிரிக்கெட் ரசிகர்கள் இவரை “ரன் மெஷின்” என்று அழைத்து வருகின்றனர். இவர் சிறப்பாக விளையாடினால் மட்டும்தான் இந்திய அணி வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், இந்திய அணி கடினமான இலக்குகளை சேஸ் செய்யும் பொழுது, விராட் கோலி சிறப்பாக விளையாடி இந்திய அணியை பலமுறை வெற்றி பெறச் செய்துள்ளார். எனவே உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் மிக முக்கியமான வீரர், விராட் கோலி தான்.