சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலக கோப்பை தொடர் ஆனது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற வீதம், வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உலக கோப்பை தொடரில் தலைசிறந்த அணிகளில், நமது இந்திய அணியும் ஒன்று. இவ்வாறு தலை சிறந்த அணியாக நமது இந்திய அணி திகழ்வதற்கு முக்கிய காரணங்களில், இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திய கேப்டன்களும் ஒன்று. இவ்வாறு இந்திய அணியை அதிக போட்டிகளில் சிறப்பாக வழிநடத்திய கேப்டன்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) முகமது அசாருதீன் ( 23 போட்டிகளில் )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர், ஒரு காலகட்டத்தில் நமது இந்திய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்த முகமது அசாருதீன். இவர் இந்திய அணிக்காக மொத்தம் 334 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 9378 ரன்களையும், 58 அரை சதங்களையும் மற்றும் 7 சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பேட்டிங்கில் மட்டுமின்றி பீல்டிங்கிலும் அசத்துவார். இவர் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 156 கேட்ச்களை பிடித்துள்ளார்.
முகமது அசாருதீன் மொத்தம் 23 உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் மொத்தம் 10 போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். இவர் கேப்டனாக செயல்பட்ட பொழுது இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 45.45 ஆகும்.
#2) மகேந்திர சிங் தோனி ( 17 போட்டிகளில் )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர், தற்போது தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் மகேந்திரசிங் தோனி. தோனி என்றாலே அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. போட்டியின் இக்கட்டான சூழ்நிலைகளில் பதட்டப்படாமல் நிதானமாக யோசித்து, இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த கூடியதில் வல்லவர். அதுமட்டுமின்றி 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் இவர்தான்.
இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது, தனி ஒருவராக போராடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். உலக கோப்பை தொடரில் இவர் மொத்தம் 17 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் மொத்தம் 14 போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். இவர் கேப்டனாக செயல்பட்ட பொழுது இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 85.29 ஆகும்.
#3) கபில் தேவ் ( 15 போட்டிகளில் )
1983 ஆம் ஆண்டு மற்றும் 1987 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக கோப்பை தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திய கேப்டன் கபில் தேவ். இவரது தலைமையில் தான் முதன் முதலாக இந்திய அணி 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை தொடரில் இவர் மொத்தம் 15 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் மொத்தம் 11 போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். இவர் கேப்டனாக செயல்பட்ட பொழுது இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 73.33 ஆகும்.