பொதுவாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அரை சதம் அடிப்பதே சற்று கடினமான விஷயம்தான். அதுவும் டெஸ்ட் போட்டிகளில் ரன்கள் எடுப்பது மிக கடினமான ஒன்று. அதிலும் முக்கியமாக முச்சதங்கள் விளாசுவது என்பது கிரிக்கெட்டை முழுமையாக தெரிந்த ஜாம்பவான்களால் மட்டும்தான் முடியும். இவ்வாறு சிறப்பாக விளையாடி அதிக முறை முச்சதங்கள் விளாசிய வீரர்களின் பட்டியலை பற்றி இங்கு காண்போம்.
#1) டொனால்ட் பிராட்மேன் ( 2 முறை )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த அதிரடி வீரரான டொனால்ட் பிராட்மேன். இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பேட்ஸ்மேன்களில் ஒருவர். இவர் குறுகிய காலம் தான் ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அதுமட்டுமின்றி இவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது இல்லை. குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் பல சாதனைகளை படைத்து விட்டு சென்றுள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிக சராசரி வைத்துள்ள வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது சராசரி 99.94 ஆகும். இவர் மொத்தம் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 2 முறை முச்சதங்களை விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி 29 சதங்களையும், 13 அரை சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) வீரேந்தர் சேவாக் ( 2 முறை )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர், நமது இந்திய அணியின் அதிரடி நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக். இவர் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி ஆகிய இரண்டு வித கிரிக்கெட் போட்டிகளிலும், டி20 போட்டிகளில் விளையாடுவது போல் அதிரடியாகத்தான் விளையாடுவார். இவர் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 2 முறை முச்சதங்களை விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி 23 சதங்களையும், 32 அரை சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3) கிறிஸ் கெயில் ( 2 முறை )
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிரடிக்கு பெயர் போன வீரர்களில் ஒருவர். இவர் களத்தில் நிற்கும் வரை சிக்சர்களுக்கு பஞ்சம் இருக்காது. இவர் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 7214 ரன்களையும், 2 முறை முச்சதங்களையும் விளாசியுள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 15 முறை டக் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#4) பிரைன் லாரா ( 2 முறை )
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த பிரைன் லாரா. இவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தார். இவர் டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 400 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மொத்தம் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 2 முறை முச்சதங்களையும், 11953 ரன்களையும் விளாசியுள்ளார். இதில் 34 சதங்களும், 48 அரை சதங்களும் அடங்கும்.