பிக் பேஷ் டீ-20 லீக் 8 வது சீசன் ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இந்தியவின் ஐபிஎல் போன்று நடத்தப்படும் புகழ் பெற்ற கிரிக்கெட் தொடர் பிக் பாஷ் டீ-20 லீக் . இதில் தற்போழுது 8 வது சீசனின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது . இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆஸ்திரேலியாவின் அனைத்து இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். மற்ற நாடு வீரர்களும் பெரும் அளவில் பங்கேற்று வருகின்றனர். இந்த தொடரில் 56 லீக் போட்டிகளை கொண்டது, இதில் 43 வது போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நடைபெற்றது . இந்த போட்டியில் மெல்போர்ன் ரினிங்டேஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ஷ்சஸ் அணிகள் மோதின .
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்ஷ்சஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது . அதன் படி களம் இறங்கிய மெல்போர்ன் ரினிங்டேஸ் அணியில் தொடக்க வீரர்களாக ஹார்வி மற்றும் பிஞ்ச் களம் இறங்கினர் . களம் இறங்கிய சிறிது நேரத்தில் பின்ச் 8 ரன்னில் கேல்லி பந்தில் விக்கெட் இழந்தார். ஹார்வி நிலைத்து விளையாடி 38 ரன்களில் ஆன்ரோ டை பந்தில் தனது விக்கெட்டை இழந்தார் . பின்னர் களம் இறங்கிய சம் ஹார்ப்பர் நிலைத்து விளையாடினார் . பின்னர் களம் இறங்கிய நபி 17 ரன்னில் குடிர் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார் . சம் ஹார்ப்பர் 37 ரன்னில் கேல்லி பந்தில் தனது விக்கெட்டை இழந்தார் . பின்னர் களம் இறங்கிய டாம் கூப்பர் 19 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார் . பின்னர் வந்த வொய்ட் 7 ரன்னில் காயம் அடைந்து நடுவில் வெளியேறினார் . கிரிஸ்டியன் 10 ரன்னிலும் பைய்ஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர் . 20 ஓவர் முடிவில் 157 ரன்களை எடுத்தது .
பின்னர் களம் இறங்கிய பெர்த் ஸ்கார்ஷ்சஸ் அணியில் முதலில் இருந்தே தடுமாற்றதுடன் விளையாட தொடங்கியது . தொடக்க வீரரான பேன்கிரப்ட் 1 ரன்னில் ட்ரைமைன் பந்தில் அவுட் ஆகினார் . மற்றோரு தொடக்க வீரர் சான் மார்ஸ் டக் அவுட் ஆகினார் . பின்னர் களம் இறங்கிய டுர்னர் 1 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார் . 8-3 விக்கெட்களை இழந்து தடுமாறியது பெர்த் அணி . பின்னர் களம் இறங்கிய மிட்சில் மார்ஸ் 5 ரன்னில் ட்ரைமைன் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார் . 12-4 விக்கெட்களை இழந்தது . பின்னர் களம் இறங்கிய கார்ட்ரையிட் 14 ரன்னில் அவுட் ஆகினார் . பிறகு நிக் 19 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார் . குல்டர் நைல் 8 ரன்னிலும் ஆன்ரோ டை டக் அவுட் ஆகியும் அதிர்ச்சி அளித்தனர் . கிரிஸ்டியன் 11 வது ஓவரில் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார் . கேல்லி 18 ரன்னில் அவுட் ஆகினார் . அனைத்து விக்கெட்களை இழந்த பெர்த் அணி 79 ரன்களை எடுத்தது . கிரிஸ்டியன் 4 விக்கெட்களை வீழ்த்தினார் . மெல்போர்ன் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் அணியை வீழ்த்தியது .