மகேந்திர சிங் தோனி நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். எனவே இனிவரும் காலங்களில் அவரது கிரிக்கெட் நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இவ்வருடத்தில் முன்னாள் இந்திய கேப்டன் தோனி இந்திய கிரிக்கெட் அணிக்கும், அத்துடன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தனது அதிரடி ஆட்டத்தை அளித்து தனது ஆட்டத்திறன் தன்னை விட்டு எந்த காலத்திலும் நீங்காது என நிரூபித்துள்ளார். இவ்வருடத்தின் தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தொடர்ந்து 3 அரைசதங்களை விளாசினார் மகேந்திர சிங் தோனி. 2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக ரன்களை விளாசியோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அத்துடன் சென்னை அணியை ஐபிஎல் இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.
தோனியின் அதிரடி ஆட்டத்திறன் சிறப்பாக உள்ளதால் அவர் மேலும் சில வருடங்களுக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாகும். 2004ல் தோனி தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி, தற்போது உலகின் சிறந்த கேப்டன் & விக்கெட் கீப்பராக வலம் வருகிறார். கடந்த வருடத்தில் இடைபட்ட காலத்தில் தோனியின் சற்று மோசமான பேட்டிங்கால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் தற்போது அவர் சிறப்பான ஆட்டத்திறனுடன் திகழந்து தன்னை இகழ்ந்தவர்களின் வாயை அடைத்துள்ளார். சற்று துவண்டு போன தன் பேட்டிங்கை மீட்டெடுத்து தனது கடந்தகால ஆட்டத்திறனிற்கே தோனி திரும்பியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற கூடாது, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பயனத்தை நீண்ட நாட்களுக்கு தொடர வேண்டும்.
மகேந்திர சிங் தோனி தற்போது முதலே, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு என்ன செய்யலாம் என்று திட்டமிட்டு வருகிறார்.இதனை ஒரு காணோளி மூலம் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பெரும் வைரலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த காணோளியில் தனது ஓவியங்கள் சிலவற்றை காண்பித்திருந்தார். இதில் மூன்று வித்தியாசமான ஓவியங்களை தோனி வெளியிட்டிருந்தார்.
காணோளியில் மகேந்திர சிங் தோனி கூறியதாவது:
"என்னுடைய இரகசிய கனவுகளை அனைவரின் முன்னே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய சிறு வயது முதலே நான் ஒரு பெரிய ஓவியராக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும். நான் அதிக கிரிக்கெட்டுகளை விளையாடி உள்ளேன். எனவே என்னுடைய சிறுவயது இலட்சியத்தை அடைய இதுவே தக்க தருணமாக நான் தேர்வு செய்துள்ளேன். என்னுடைய சில ஓவியங்களை உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறேன்."
தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்த பிறகு தோனி தனது சிறு வயது விருப்பத்தை மீண்டும் செய்ல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் 2019 ஐசிசி உலகக் கோப்பைக்குப் பிறகு தோனி 50 கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்று விடுவார் எனத் தெரிகிறது. 2014ல் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனி 341 ஒருநாள் தொடரில் பங்கேற்று 50.72 சராசரியுடன் 10,500 ரன்களை விளாசியுள்ளார். இதில் 71 அரைசதங்கள் மற்றும் 10 சதங்கள் அடங்கும்.