எம் எஸ் தோனி லேவில் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் வைரலாகிறது !

MS Dhoni Plays Cricket With Kids In Leh Jammu and Kashmir, the Picture Goes Viral in social media
MS Dhoni Plays Cricket With Kids In Leh Jammu and Kashmir, the Picture Goes Viral in social media

இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனி உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் பிராந்திய இராணுவத்துடன் தனது இரண்டு வார கால ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. இந்த பயிற்சி கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள 106 டிஏ பட்டாலியன் (பாரா) பிராந்திய இராணுவத்தில் தோனி சேர்ந்தார் என்பது குறித்துப்பிடத்தக்கது. கடந்த இரண்டு வாரங்களாக பட்டாலியனுடன் தீவிர பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் தனது ஓய்வு நேரத்தில் லேவில் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடிய தகவல் மற்றும் புகைப்படம் வைரலாகியது.

ஐபிஎல் உரிமையாளரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படத்தில், எம் எஸ் தோனி ஜம்மு காஷ்மீரில் உள்ள லேயின் உள்ளூர் குழந்தைகளுடன் ஒரு சிமென்ட் கூடைப்பந்து ஆட்ட மைதானத்தில் டென்னிஸ் பந்தைக் கொண்டு பேட்டிங் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் ஒரே நோடியில் காட்டுத் தீ போல் பெருமளவில் வைரலாகின.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம் எஸ் தோனி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் அகாடமியை நிறுவுவதற்கான விருப்பத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற ஸ்டம்பர் தோனி தனது எதிர்கால முயற்சி குறித்து இந்திய விளையாட்டு அமைச்சகத்தை முறையாக ஆலோசிக்க எதிர்பார்த்துக் கொண்டுள்ளார். 38 வயது நிரம்பிய அவதாரத்தில் பார்ப்பதை நெட்டிசன்கள் முற்றிலும் விரும்பினர். மேலும், இந்திய அணியில் அவர் திரும்புவது குறித்து பல பயனர்கள் ஜார்க்கண்ட் உள்ளூர் மக்களிடம் கேள்வி எழுப்பினர்.

Indian former captain ms dhoni
Indian former captain ms dhoni

நியூசிலாந்திற்கு எதிரான 2019 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் இதயத்தை உடைத்ததைத் தொடர்ந்து, எம்.எஸ். தோனியின் ஓய்வு குறித்து ஊடகங்கள் மற்றும் இணையதளத்தில் பெருமளவில் பேசப்பட்டது. ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுகளில், டைனமிக் பேட்ஸ்மேன் தோனி பி.சி.சி.ஐ க்கு இரண்டு மாதங்கள் மட்டும் ஓய்வு கேட்டு இராணுவத்தில் தனது கடமைகளை நிறைவேற்றுவதாக கூறினார். இதற்கிடையில், ஏஸ் கிரிக்கெட் வீரர் தோனி இல்லாத நிலையில், இந்திய அணியில் இளம் விரரான ரிஷாப் பண்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சுற்றுப்பயண தொடரில் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.

சமீபத்திய காலங்களில், எம்.எஸ். தோனி அதிரடி பேட்டிங் திறன்களைக் குறைத்ததற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். முன்னாள் ஆட்டக்காரர் ஐ.சி.சி போட்டியை எட்டு ஆட்டங்களில் இருந்து சராசரியாக 45 க்கு மேல் 273 ரன்கள் மற்றும் 87.78 சராசரியுடன் முடித்தார். உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் எம் எஸ் தோனி தனது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்து எந்த ஒரு அறிக்கையை அறிவிக்காமல் இருக்கிறார்.

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications