இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோணி ஒரு வீரராக மட்டுமல்லாமல் சிறந்த கேப்டனாக இந்திய அணிக்கு ஐசிசி-ன் அணைத்து வகையான கோப்பைகளையும் வென்று தந்துள்ளார். கேப்டனாக அனைத்துவகையான போட்டிகளிலும் சிறந்து விளங்கிய இவர் ஒரு கட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்வி காரணமாக தாமாக முன்வந்து தனது ஓய்வினை அறிவித்தார். இவரின் இழப்பு இந்திய அணியை பெரிதளவில் பாதித்தது.
தனது பேட்டிங்கின் மூலம் பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளார் இவர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தால் தற்போது ஆட்டம் முடிந்து விட்டது என ரசிகர்கள் அனைவரும் சோர்ந்துவிடுவர். ஆனால் அப்போதைய காலகட்டத்தில் தோணி இருக்கும் வரை ஒற்றையாளாக போராடி இந்தியாவை கரை சேர்ந்துள்ளார். ஆனால் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் விரைவில் ஓய்வினை அறிவித்து விட்டார். இந்நிலையில் அவர் டெஸ்ட் போட்டிகளின் களமிறங்கி அசத்திய சிறந்த ஆட்டங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#) 76* vs இங்கிலாந்து , லார்ட்ஸ் 2007
2007 ஆம் ஆண்டிலிருந்து தோணி கிரிக்கெட்டில் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கினார். அப்போது இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதல் இன்னிங்ஸ்-ல் இங்கிலாந்து அணி 298 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய இந்திய அணி 201 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அடுத்து இரண்டாம் இன்னிங்ஸ்-ல் இங்கிலாந்து அணி கெவின் பீட்டர்சன்-ன் அதிரடி சதத்தால் 281 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு 380 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியானது 145 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. அப்போது களத்தில் நுழைத்த தோணி விவிஎஸ் லட்சுமனுடன் இணைந்து இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தனர். இருவரும் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 86 ரன்களை சேர்த்தனர்.
அடுத்து பந்துவீச்சாளர்களுடன் ஜோடி சேர்ந்த தோணி 30 ஓவர்களை தாக்குப்பிடித்து 159 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் போட்டியை ட்ரா ஆக்கினார். அதன் பின் நடந்த இரண்டாவது போட்டியை இந்திய அணி வென்றதன் மூலம் தொடரை 1-0 என வென்று வரலாற்று சாதனை படைத்தது. தோணி-யின் இந்த இன்னிங்க்ஸ் இன்றளவும் எவராலும் மறக்க முடியாத இன்னிங்சாக பார்க்கப்படுகிறது.
#) 99 vs இங்கிலாந்து , நாக்பூர் 2012
2012 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு டெஸ்ட் சவாலான ஆண்டாகவே அமைந்தது. அப்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது அந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது. எனவே இந்திய அணி 8 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இலக்கவே இல்லை என்ற சாதனையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
எனவே இந்த கடைசி போட்டியை கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தோணி தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி 330 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழக்க இந்த போட்டியிலும் தோல்வி தள்ளப்பட்டது. அப்போது களமிறங்கினார் கேப்டன் கூல் தோணி.
அவர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து 5 வது விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தனர். இந்த போட்டியில் தோணி 246 பந்துகளை சந்தித்து 99 ரன்கள் குவித்து துர்த்தாஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இந்த 99 ரன்களில் 38 ரன்கள் மட்டுமே பவுண்டரிகள் மூலம் எடுக்கப்பட்டதாகும். இருந்தாலும் இறுதியில் அந்த போட்டி ட்ராவானது. எனவே தொடரினை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
#) 224 vs ஆஸ்திரேலியா , சென்னை 2013
இந்த இன்னிங்க்ஸை தோணி ரசிகர்கள் மட்டுமல்ல கிரிக்கெட் ரசிகர்கள் எவரும் மறக்க முடியாததாக உள்ளது. அதுவும் அணியின் கேப்டன் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அதற்க்கான சூழ்நிலைகளும் அமையாது. இரட்டை சதத்தை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகினார் தோணி. இந்த இரட்டை சதத்தை அடிக்க அவர் ஒருநாளை விட குறைவான நேரத்தையே எடுத்துக்கொண்டார்.
அதாவது இந்த இரட்டை சதத்தை அவர் வெறும் இரண்டரை சீசன்களில் கடந்துவிட்டார். புகழ் பெற்ற சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மைக்கேல் கிளார்க்-ன் சதம் மற்றும் வார்னர், ஹென்ரிகியூஸ் ஆகியோரின் அரைசதத்துடன் 380 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்து வெளியேற 196/4 என்ற நிலையில் மைதானத்தில் நுழைந்தார் தோணி. இந்திய அணியானது ஆஸ்திரேலியாவை காட்டிலும் 184 ரன்கள் பின்தங்கி இருந்தது.
அப்போது விராட் கோலியுடன் ஜோடி சேந்த தோணி தனது அதிரடியை காட்டி 5 வது விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தனர். அதன் பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இந்திய இழந்தாலும் மறுமுனையில் நங்கூரம் போல நிலைத்து ஆடிய தோணி தன அது அதிரடியால் 224 ரன்கள் குவித்தார். இதில் இந்திய அணி 406/8 என்ற நிலையில் இருந்தபோது களமிறங்கிய பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் உடன் இணைந்து 9 வது விக்கெட்டுக்கு 140 ரன்களை சேர்த்து சாதனை படைத்தார். இறுதியில் இந்தியா 572 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் தோணி 265 பந்துகளில் 224 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அந்த போட்டியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோணி தனது.டெஸ்ட் கேரியரில் அடித்த அதிகபட்ச ரன்னும் இதுவே.