எம்.எஸ்.தோனி 2019 உலகக் கோப்பையில் இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். மாற்று விக்கெட் கீப்பருக்கான இடத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தினேஷ் கார்த்திக் ஒரு பேட்ஸ்மேனாக தோனியை விட தனது சிறப்பான பேட்டிங்கை இந்திய அணிக்கு அளித்துள்ளார்.
நாம் இங்கு புள்ளி விவர ஒப்பிட்டின்படி தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை காண்போம். இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரம் கடந்த 2015 உலகக் கோப்பைக்கு பிறகு நடந்த போட்டிகளை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
ஃபினிஷிங் சாதனைகள்:
முறை 1: இந்திய அணியின் சேஸிங் வெற்றியில் இருவரது சராசரி
இந்த முறையின் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு யார் அதிக பங்களிப்பை அளித்துள்ளனர் என்பது நமக்கு தெரிகிறது. அத்துடன் கடினமான சூழ்நிலையில் எவ்வாறு போட்டிகளை கையாண்டுள்ளனர் என்பதும் நமக்கு தெரிகிறது.
எம்.எஸ்.தோனி
2015 முதல் இந்திய சேஸிங் வெற்றியில் 52 போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி 91.50 சராசரியுடன் அற்புதமான ரன்களை குவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக்
2015 முதல் இந்திய சேஸிங் வெற்றியில் அட்டகாசமான சராசரியுடன் 272 ரன்களை குவித்துள்ளார்.
இந்த இரு புள்ளிவிவரத்தை வைத்து பார்க்கும் போது தினேஷ் கார்த்திக் கடினமான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடியுள்ளார் என தெரிகிறது.
எம்.எஸ்.தோனி: 0 புள்ளி
தினேஷ் கார்த்திக்: 1 புள்ளி
முறை 2: நாட்-அவுட் சதவீதம்
இதன்மூலம் இக்கட்டான சூழ்நிலையில் யார் சிறப்பாக விளையாடியுள்ளனர் என்றும், சிறப்பாக விளையாடி தனது விக்கெட்டை இழக்காமல் யார் ஆட்டத்தை முடித்து வைத்துள்ளனர் என்றும் நமக்கு தெரிகிறது.
எம்.எஸ்.தோனி
2015 முதல் 70 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 25.7% போட்டிகளில் மட்டுமே இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
தினேஷ் கார்த்திக்
2015 முதல் 17 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 47% போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
இதனை வைத்து பார்க்கும் போது மீண்டும் தினேஷ் கார்த்திக்கே வென்றுள்ளார். தினேஷ் கார்த்திக் தோனியை விட அதிக சதவீதம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். தோனிக்கு அரை புள்ளி மட்டுமே வழங்கப்படுகிறது.
தோனி: 0.5 புள்ளி
தினேஷ் கார்த்திக்: 2 புள்ளிகள்
மேற்கூறியதை வைத்து பார்க்கும் போது 2015 முதல் தோனியை விட தினேஷ் கார்த்திக் சிறந்த ஃபினிஷராக இருந்து வந்துள்ளார்.
நிலைத்து நின்று விளையாடும் திறமை
முறை 1: நம்பர்-4ல் 50+ ரன்களின் சதவீதம்
இந்த முறை மூலம் யார் அணியின் ரன்களை மிடில் ஆர்டரில் உயர்த்துவார்கள் என்றும், இக்கட்டான சூழ்நிலையில் யார் அணியின் வெற்றிக்கு உதவ முன்வந்துள்ளனர் என்றும் தெரியவரும்.
எம்.எஸ்.தோனி
2015 முதல் இவர் 12 போட்டிகளில் நம்பர்-4 ஆக களமிறங்கி 3 அரைசதங்களை குவித்துள்ளார். எம்.எஸ்.தோனி 50+ ரன்களை நம்பர்-4 ல் களமிறங்கி 25சதவீத போட்டிகளில் அடித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக்
2015 முதல் இவர் 9 போட்டிகளில் நம்பர்-4 ஆக களமிறங்கி 3 அரைசதங்களை குவித்துள்ளார். தினேஷ் கார்த்திக் 50+ ரன்களை நம்பர்-4 ல் களமிறங்கி 33சதவீத போட்டிகளில் அடித்துள்ளார்.
இதனை வைத்து பார்க்கும் போது பேட்டிங் லைன்-அப்பில் தினேஷ் கார்த்திக் நிலைத்து நின்று விளையாடும் திறமை உடையவராக உள்ளார். எனவே அவருக்கு ஒரு புள்ளி வழங்கப்படுகிறது.
எம்.எஸ்.தோனி: 2 புள்ளிகள்
தினேஷ் கார்த்திக்: 3 புள்ளிகள்
முறை 2: நம்பர்-4ல் பேட்டிங் சராசரி
இந்த முறையின் மூலம் யார் அதிக நிலைப்புத் தன்மையுடன் விளையாடுவர் என கண்டறிய உதவுகிறது. அத்துடன் நம்பர்-4ல் யார் முதன்மை பேட்ஸ்மேன் என கண்டறியவும் உதவுகிறது.
எம்.எஸ்.தோனி
2015 முதல் 4வது பேட்டிங் வரிசையில் தோனியின் சராசரி 40.72ஆக உள்ளது.
தினேஷ் கார்த்திக்
2015 முதல் 4வது பேட்டிங் வரிசையில் தினேஷ் கார்த்திக்கின் சராசரி 52.80 ஆக உள்ளது.
இதனை வைத்து பார்க்கும் போதும் தினேஷ் கார்த்திக்கே கைத்தேர்ந்தவராக திகழ்கிறார்.
எம்.எஸ்.தோனி: 2 புள்ளிகள்
தினேஷ் கார்த்திக்: 4 புள்ளிகள்
மேற்கண்ட ஒப்பிட்டின் மூலம் பேட்டிங்கில் எம்.எஸ்.தோனியை விட தினேஷ் கார்த்திக்கே சிறந்தவராக உள்ளார். தோனியின் விக்கெட் கீப்பிங் திறமை மற்றும் அனுபவம் உலகக் கோப்பையில் இந்திய அடிக்கு கைகொடுக்கும். இந்த திறமை எவருக்கும் வராத ஒன்றாகும்.
எனவே இருவருமே உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் விருப்பமாகும். லெஜென்ட்ரி விக்கெட் கீப்பர் மற்றும் அனுபவ முன்னாள் கேப்டன் தோனியை விட தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் சிறந்தவராக உள்ளார்.