ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய தொடரில், தொடர்ந்து 3 டி-20 போட்டிகளிலும் மற்றும் தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடினார். இதனால் சற்று சோர்வாக இருப்பார் எனவே அவருக்கு முழு ஓய்வு தேவை என தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலும் மற்றும் நியூசிலாந்து தொடரிலும் ஏன் அவரை அணியில் சேர்க்கவில்லை என்பதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். அதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடினார் ரிஷப் பண்ட். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார். இந்த சிட்னி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சிட்னி டெஸ்டில் நிதானமாக ஆடி இந்த சதத்தை அடித்தார். இதன் மூலம் தன்னால் அதிரடியாக மட்டுமின்றி நிதானமாகவும் ஆட முடியும் என நிரூபித்துள்ளார்.
அதுமட்டுமின்றி தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் ரிஷப் பண்ட். இவ்வாறு சிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியில் தனக்கென நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் தலா இரண்டு சதங்களை விளாசியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் சிறிதும் ஓய்வின்றி விளையாடி வருகிறார் ரிஷப் பண்ட். எனவே அவருக்கு முழு ஓய்வு தேவை என தேர்வு குழு தலைவர் பிரசாத் தெரிவித்துள்ளார். திறமை வாய்ந்த ரிஷப் பண்ட் ஏன் நியூசிலாந்து தொடரில் தேர்வு செய்யப்படவில்லை என தேர்வுக் குழு தலைவர் பிரசாத்திடம் கேட்கப்பட்ட பொழுது அவர் கூறிய பதில் என்ன என்றால்," ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அது மட்டுமின்றி இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்ன எதிர்பார்க்கின்றனரோ அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிறப்பாக விளையாடி வருகிறார் ரிஷப் பண்ட். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 11 கேட்ச்களை பிடித்து அவரது திறமையை வெளிப்படுத்தினார் ரிஷப் பண்ட். அது மட்டுமின்றி 2019 உலகக் கோப்பைக்கான அணி செயல்திட்டத்தில் ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார். எனவே அவருக்கு சற்று ஓய்வு தேவை. அதனால் தான் இரண்டு வாரங்கள் அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளோம். அதற்காகத்தான் நியூசிலாந்து தொடரிலும் அவரை தேர்வு செய்யவில்லை" என்று தேர்வு குழு தலைவர் பிரசாத் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி மேலும் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக ஒரு நாள் ஆட்டங்களில் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் சேர்க்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், "இந்திய அணியின் 70 சதவீத வெற்றிகளில் இவர்கள் இருவரின் பங்கும் உள்ளது என்றார். எனவே தான் அவர்களை தேர்வு செய்தோம்" என தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத் கூறினார். இவ்வாறு இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களின் மீதும் தனிப்பட்ட கவனத்தை செலுத்தி வருகிறது இந்திய தேர்வு குழு.