ஐபிஎல் சீசன்-11 ஐ பொறுத்தவரை முன்னாள் சாம்பியனான மும்பை அணி தனது ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணி கடந்த முறை ஐந்தாம் இடத்தையே பிடித்தது.
மூன்று முறை சாம்பியன் படத்தை வென்ற அணி இம்முறையும் வெல்ல முயற்சிக்கும். அதற்கான முதல் படி நாளை டிசம்பர் 18 நடக்கவிருக்கும் வீரர்களுக்கான ஏலத்தில் இருந்தே துவங்கும். மும்பை அணி தனது முக்கிய வீரர்களை தக்கவைத்து கொண்டது, இருப்பினும் தனது அணியில் எஞ்சியுள்ள இடங்களை நிரப்ப முழு வீச்சில் முயற்சிக்கும். ஜே.பி டுமினி, பேட் கம்மின்ஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான் போன்ற சிறந்த வீரர்கள் தனது அணியிலிருந்து மும்பை விடுவித்துள்ளது. தனது அணியில் 7 இடங்களை நிரப்ப 10.65 கோடி ரூபாய் மீதம் உள்ளது.
தக்கவைத்துள்ள வீரர்களின் விவரம்: ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீட் பும்ரா, க்ருனால் பாண்டியா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், மாயன்க் மார்க்கண்டே, ராகுல் சாஹார், அணுகுள் ராய், சித்தேஸ் லாட், ஆதித்யா தாரே, இவான் லீவிஸ், கிரேன் பொல்லார்டு, பென் கட்டிங், மிட்செல் மெக்லெகன், ஆடம் மில்னே, ஜெசன் பெஹண்ட்ராப்.
குவின்டன் டிகாகை பெங்களூரு அணியிடம் மும்பை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணி நாளைய ஏலத்தில் ஒரேவொரு வெளிநாட்டு வீரரை மட்டுமே வாங்க முடியும். மும்பை அணி வாங்க முயற்சிக்கும் வீரர்களின் விவரம் பின்வருமாறு.
5. கார்லொஸ் ப்ராத்வெயிட்
ப்ராத்வெயிட் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் விடுவிக்கப்பட்டார். இந்த செய்தி ஐதராபாத் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. மேற்கு இந்திய தீவுகளை சேர்ந்த ப்ராத்வெயிட் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர் ஆவார். சன்ரைசர்ஸின் இழப்பு மும்பை அணிக்கு சாதகமாக அமையவிருக்கிறது.
ப்ராத்வெயிட் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன் மற்றும் டெத் ஓவர்ஸ் என அழைக்கப்படும் இன்னிங்சின் கடைசி ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் வல்லமை கொண்டவர். கடந்த சீசனில் 13 ஆட்டங்களில் 170 ரன்கள், 168.32 என இமாலய ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். கிரேன் பொல்லார்டு சிறந்த பார்மில் இல்லாத நிலையில் மும்பை அணிக்கு ப்ராத்வெயிட் நம்பிக்கை அளிப்பார் என எதிரப்பார்க்களாம்.
4. முகமது ஷமி
குவின்டன் டிகாகின் வருகையும் மற்றும் வெளிநாட்டு வீரர்களான லீவிஸ், பென் கட்டிங் மற்றும் பொல்லார்டு உள்ளதால் மும்பை அணியால் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை ப்ளேயிங் 11ல் இடம்பெற செய்வது கடினம். ஆகையால் மும்பை அணி பும்ராவிற்கு ஜோடியாக இந்திய வேகப்பந்து வீச்சாளரை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
அவ்விடத்தை நிரப்ப வல்லவர் முகமது ஷமி. டெல்லி அணியிலிருந்து காயம் காரணமாக கடந்த சீசன் நடுவில் விடுவிக்கப்பட்டார்.
ஷமி போன்ற வீரருக்கு தனது முழு திறமையை வெளிப்படுத்த இதுவே சிறந்த தருணமாகும்.
ஒரு கோடி ரூபாயை தனது ஆரம்ப விலையாக கொண்டுள்ள ஷமி அனைத்து அணியின் கவனத்தையும் ஈர்ப்பார். இருப்பினும் மும்பை அணி இவரை தனது அணியில் இடம்பெற செய்ய முயற்சிக்கும்.
3. அக்சார் படேல்
ஐபிஎல் ஆரம்பத்திலிருந்தே மும்பை அணிக்கும் ஆல் ரவுண்டர்களுக்கும் சிறந்த பிணைப்பு இருந்துவருகிறது. கிரேன் பொல்லார்டு, டுவெய்ன் பிராவோ, பாண்டியா சகோதரர்கள் போன்ற சிறந்த ஆல் ரவுண்டர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது மும்பை அணி. இவ்வரிசையில் படேலும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை நடந்த மெகா ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணி தக்கவைத்திருந்த ஒரே வீரர் அக்சார் ஆவார். இவர் காயம் மற்றும் அஸ்வின், முஜீபின் வருகையால் அணியில் இடம்பெற வில்லை. பஞ்சாப் அணியால் விடுவிக்கப்பட்டுள்ள இவர் அந்த அணிக்காக 68 போட்டிகளில் 61 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார், பேட்டிங்கிளும் 125 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் திறமை படைத்தவர். இவர் இம்முறை நிச்சயமாக பெரிய தொகைக்கு விலை போவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவரை தனது அணியில் இடம்பெற செய்ய மும்பை அணியிடம் போதிய தொகை உள்ளாதா என்பது சந்தேகம் தான்.
2.சர்ப்ராஸ் கான்
2016 ஐபிஎல் சீசனில் புவனெஷ்வர் குமாரின் ஒரே ஓவரில் 19 ரன்கள் அடித்து மற்ற அணியினரின் கவனத்தை பெற்றார் இளம் வீரரான சர்ப்ராஸ். கடந்த சீசனில் பெங்களூர் அணி இவரை தக்கவைத்தது. ஆனால் அந்த அணியின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிய சர்ப்ராஸ் அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். மும்பை அணிக்கும் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் தேவையான நிலையில் சர்ப்ராஸ் அந்த இடத்தை நிரப்பும் வல்லமை படைத்தவர். தனது வித்தியாசமான பேட்டிங் திறமையால் பெரிய பவுலர்களையும் சிறப்பாக எதிர் கொள்வார்.
1. ஜெய்தேவ் உனத்கட்
ஐபிஎல் 10 ஆம் சீசனில் பூனே அணியில் மிகச்சிறப்பாக விளையாடிய உனத்கட் கடந்த வருடம் நடைபெற்ற மெகா ஏலத்தில் ரூபாய் 11.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன இந்திய வீரர் உனத்கட் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடவில்லை. இம்முறை ஏலத்தில் ரூபாய் 1.50 கோடியை ஆரம்ப தொகையாக கொண்டுள்ளார். மும்பை அணியும் கம்மின்ஸ் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவித்து பும்ராவை தவிர்த்து வேகப்பந்து வீச்சாளர்கள் இன்றி உள்ளது. இவ்விடத்தில் ஜெய்தேவ் சிறப்பாக பொறுந்துவார்.
இவ்வீரர்களை தவிர மும்பை அணி மேற்கு இந்திய தீவுகளின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஷிம்ரோன் ஹெட்மெயரையும் வாங்க போட்டியிடும்.