18 உள்ளே 10 வெளியே - காயை நகர்த்த தயாரான மும்பை இந்தியன்ஸ்!

பொல்லார்டை தக்க வைத்த மும்பை சென்ற வருடம் போல் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்
பொல்லார்டை தக்க வைத்த மும்பை சென்ற வருடம் போல் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்

அடுத்த வருட ஐபிஎல் ஏலத்திற்கு எண்ணி 32 நாட்களே இருக்கும் வேளையில் ஒவ்வொரு அணியும் கட்டம் கட்டி காய்களை நகர்த்தி வருகின்றன. ஏலத்திற்கு முன்னர் 'பழையன கழிந்து புதியன புகுத்தி' அணியை சீர் செய்யும் பணியில் இறங்கியுள்ளது ஐபிஎல் அணிகள்.

டெல்லி அணி 3 வீரர்களுக்கு பலி கொடுத்து ஒற்றை ஆளாக ஹைதராபாத்தில் இருந்து தவானை இழுத்து வந்துள்ளது. தமிழக ஆல் ரவுண்டார் விஜய் சங்கர், சபாஷ் நதீம் மற்றும் இளம் வீரர் அபிஷேக் சர்மா ஆகியோரை ஹைதராபாத்திடம் கொடுத்துவிட்டு ஷிகர் தவானை வாங்கியுள்ளது டெல்லி.

அதேபோல் பெங்களூர் அணியில் இருந்து குவிண்டன் டி காக் ரூ 2.8 கோடி மதிப்பில் மும்பை அணிக்கு மாற்றப்பட்டார். இப்படி ஒவ்வொரு அணியாக தங்களது வேலைகளை ஆரம்பிக்க... ஐபிஎல் தொடரின் ராஜாக்கள் சென்னை மற்றும் மும்பை அணிகள் லேட்டாக.. லெட்டஸ்ட்டாக காய்களை நகர்த்த துவங்கி உள்ளன.

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 வீரர்களை தாங்கள் கை விடுவதாக அறிவித்தது. அதில் இங்கிலாந்து வீரர் மார்க் உட் மற்றும் இந்திய உள்ளூர் வீரர்கள் இருவர் அடங்குவர்.

இந்நிலையில் மும்பை அணி சென்ற வருட ஐபிஎல் தொடரில் ஏலத்தில் தான் எடுத்த 28 வீரர்களில் முக்கியமான 18 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு அதிகபட்சமாக 10 வீரர்களை வெளியே தள்ளி உள்ளது. மும்பை அணி தக்கவைத்துக் கொண்டுள்ள 18 வீரர்கள் நல்ல பேலன்ஸ் உள்ளது. ஆல் ரவவுண்டார்களாக ஹர்திக் பாண்டியா க்ருனால் பாண்டியா மற்றும் கெய்ரோன் போல்லார்ட் ஆகியோர் உள்ளனர்.

வேகப்பந்து வீச்சிற்கு சிறந்த யூனிட்டை தக்க வைத்துள்ளனர். ஜஸ்ப்ரிட் பும்ரா, ஆடம் மில்ன், மிட்செல் மெக்லானகன் என பிரம்மாண்ட வேகக்கூட்டணியாக காட்சியளிக்கிறது வேகப்பந்து வீச்சு யூனிட்.

பேட்டிங்கிற்கு எப்போதும் மும்பையில் பஞ்சம் இருக்காது. வழக்கம் போல ஒரு வெளிநாட்டு அதிரடி ஒப்பனர், ஏவின் லெவிஸ் ரூபத்தில் உள்ளார். அடுத்த வரிசையில் கேப்டன் ரோகித், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், குவிண்டன் டி காக் என எந்த பந்து வீச்சினையும் துவம்சம் செய்யம் பேட்டிங் பிரம்மாண்டம் தக்க வைக்கப்பட்டுள்ளது.

சுழற்பந்து வீச்சிற்கு, மயங் மார்கண்டே, ராகுல் சகார், க்ருனால் பாண்டியா வலு சேர்க்கின்றனர்.

கழற்றிவிடப்பட்ட வீரர்களில் முஸ்தாபிஜுர் ரஹ்மான், பேட் கம்மின்ஸ், ஜே.பி டுமின் உள்ளூர் வீரர் பிரதீப் சங்வன் ஆகியோர் முக்கியமான வீரர்கள் ஆவர். பொறுத்திருந்து பார்ப்போம் சென்றமுறை ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை சரியான வீரர்களோடு களமிறங்கி கோப்பையை தட்டுகிறதா என...

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டிய, ஜஸ்ப்ரிட் பும்ரா, க்ருனால் பாண்டிய, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுரியகுமார் யாதவ், மயான்க் மர்கண்டே, ராகுல் சகார், அனுகுல் ராய், சிதேஷ் லாட், ஆதித்யா தாரே, குவிண்டோன் டி காக், எவின் லூயிஸ், பொல்லார்டு , பென் கட்டிங், மிட்செல் மெக்லினகஹான், ஆடம் மில்னே, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப்.

கழற்றிவிடப்பட்ட வீரர்கள்

சவுரப் திவாரி, பிரதீப் சங்வான், மொஹ்சின் கான், எம்.டி. நிதீஷ், ஷரத் லம்பா, டதிந்தர் சிங் தில்லான், ஜேபி டுமினி, பாட் கம்மின்ஸ், முஸ்டஃபிஜுர் ரகுமான், அகில தனஞ்சயா.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now