இந்தியாவில் நடத்தப்படும் மிகப் பிரபலமான தொடர் ஒன்று இருக்கிறது என்றால் அது ஐபிஎல் தொடர் தான். இந்த ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தியாவில் இந்த ஐபிஎல் தொடர் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடரின் 12 ஆவது சீசன் இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. இதில் அனைத்து அணிகளும் பல வீரர்களை தங்களது அணியில் ஏலத்தில் எடுத்துள்ளது.
இவ்வாறு ஒரு சில வீரர்களை, மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் ஏலத்தில் எடுத்துள்ளது. அந்த வீரர்களில் யாரை தொடக்க ஆட்டக்காரராக பயன்படுத்துவது, யாருக்கு வாய்ப்பு கொடுப்பது, யாரை அணியிலிருந்து வெளியே உட்கார வைப்பது என்று பல குழப்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. அதைப் பற்றி இங்கு காண்போம்.
ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ் அணி. இவ்வாறு சொல்வதற்கு காரணம் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான குயின்டன் டி காக்கை எடுத்துள்ளது.
இதில் தற்போது என்ன பிரச்சனை இருக்கிறது என்றால், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே மிகச் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வருகிறார் சூர்யகுமார் யாதவ். அதுமட்டுமின்றி மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான லெவிஸ் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மூன்று தொடக்க தொடக்க ஆட்டக்காரர்களில், எந்த இரண்டு பேரை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்குவது என்று மும்பை இந்தியன்ஸ் அணி குழப்பத்தில் உள்ளது.
அதுமட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் உள்ளார். மேலும் இஷான் கிஷான் மற்றும் டி காக் ஆகிய இருவரும் விக்கெட் கீப்பர்கள் தான். இவர்கள் இருவரில் யாரை விக்கெட் கீப்பராக பயன்படுத்துவது என்று குழப்பத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
மேலும் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த வருடம் விளையாட இருக்கிறார். இவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்துள்ளதால், மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த பொல்லார்ட் விளையாடிய இடத்திற்கு தற்போது பிரச்சனை வந்துள்ளது. இவர்கள் இருவரில் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்று மும்பை இந்தியன்ஸ் அணி குழப்பத்தில் உள்ளது.
அதுமட்டுமின்றி லசித் மலிங்காவை ஏலத்தில் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி. சிறந்த டெத் பவுலர் ஆன இவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எடுத்துள்ளது கூடுதல் பலமாக உள்ளது. இந்தக் குழப்பங்கள் அனைத்தையும் மும்பை இந்தியன்ஸ் அணி எவ்வாறு கையாளப் போகிறது என்று ஏப்ரல் மாதம் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். குறிப்பாக ரோகித் சர்மா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவாரா என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு காத்திருக்கிறது.