தற்போது ஐபிஎல் தொடரின் நம்பர்-1 அணியாக விளங்குவது மும்பை இந்தியன்ஸ் அணிதான். இவ்வாறு சொல்வதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளைக் கண்ட ஒரே அணி மும்பை அணி தான்.
அதுவும் குறிப்பாக இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மூன்று முறை கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இவ்வாறு சிறந்த அணியாக திகழ்வதற்கு முக்கிய காரணம், மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் சில திறமையான வீரர்கள் தான். அந்த வீரர்களை பற்றி இங்கு காண்போம்.
#1) ரோகித் சர்மா
தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு பிறகு, சிறந்த கேப்டனாக திகழ்ந்து வருகிறார் ரோகித் சர்மா. அதுவும் குறிப்பாக கடந்த சில வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் பார்மில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சராசரியான ரன்களை அடித்து கொண்டே வருகிறார். அதுவும் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். குறைந்த ரன்களை அடித்தாலும் பதட்டப்படாமல் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அதுவும் குறிப்பாக இவர் ஒரு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அந்த போட்டியில் கட்டாயம் மும்பை அணி தான் வெற்றி பெறுகிறது. எனவே மும்பை அணியின் வெற்றி இவரது விளையாட்டை பொறுத்துதான் அமைகிறது என்று இதிலிருந்து தெரிகிறது.
#2) பும்ரா
கடந்த ஒரு வருடமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நம்பர்-1 பவுலராக திகழ்ந்து வருகிறார். அதுவும் குறிப்பாக டி20 போட்டிகளில் டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் மிக சிறப்பாக பந்து வீசியதால் நேரடியாக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். தற்போது உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை உருவாக்கியுள்ளார். ஒரு சில போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி குறைந்த ரன்களை மட்டுமே அடிக்கும். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் மிகத் துல்லியமாக பந்துவீசும் திறமை படைத்தவர். எனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருக்கிறார் பும்ரா.
#3) ஹர்திக் பாண்டியா
ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக திகழ்கிறார் ஹர்திக் பாண்டியா. இவர் பேட்டிங் செய்யும்போது சிக்ஸர்களுக்கு பஞ்சம் இருக்காது. பொதுவாக அனைத்து பேட்ஸ்மேன்களும் வேகப்பந்தில் சிறப்பாக விளையாடுவார்கள்,சுழற்பந்தில் சற்று திணறுவார்கள். ஆனால் ஹர்திக் பாண்டியா சுழற்பந்தில் மிகச் சிறப்பாக விளையாடுவார். சுழற்பந்தை நின்ற இடத்திலிருந்து சிக்ஸரை அடிக்க கூடிய திறமை படைத்தவர்.
அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவேதான் தற்போது உள்ள இந்திய அணியில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி அருமையாக பீல்டிங் மற்றும் கேட்சிகளையும் பிடிப்பார். மும்பை இந்தியன்ஸ் அணியிலும் மிக முக்கியமான வீரராக திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ஏலத்தில் விடாமல், அணியில் தக்கவைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சிறப்பான விளையாட்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது.