ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெய்-னை டிவிட்டரில் வசைபாடிய மும்பை இந்தியன்ஸ் அணி

Tim Paine sledge to Rohit Sharma
Tim Paine sledge to Rohit Sharma

நடந்தது என்ன ?

மெல்போர்ன் டெஸ்ட்டில் இன்று நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடியது. அப்போது ஆஸ்திரேலியா டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் விக்கெட்டை ஜடேஜா சுழலில் வீழ்த்தினார். மூன்று முறை ஐபிஎல் சேம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இவரது விக்கெட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் வசைபாடியுள்ளது.

பின்னணி :

மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ,புஜாராவின் சிறப்பான சதத்தால் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிக்கொண்டிருக்கும் போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் , ரோகித் சர்மா-வை வேடிக்கையாக வசைபாடினார்.

டிம் பெய்ன் பேசியது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக கேட்டது. டிம் பெய்ன் களத்தில் ஆரோன் ஃபின்ச்-சை நோக்கி , எனக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணியில் நான் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இந்த இன்னிங்ஸில் நாதன் லயான் ஓவரில் ரோகித் சர்மா சிகஸர் விளாசினால் நான் மும்பை அணியை தேர்வு செய்கிறேன் என்று கூறி ரோகித் சர்மா-வின் கவணத்தை திசை திருப்ப முயன்றார் டிம் பெய்ன்.

பின்னர் ஆட்டம் முடிந்து இதைப்பற்றி பேசிய ரோகித் சர்மா டிம் பெய்ன்-ற்கு பதிலடி தரும் விதமாக கூறியதாவது , டிம் பெய்ன் கூறியதை நான் கேட்டேன் , ஆனால் நான் அதில் கவணம் செலுத்தவில்லை. என்னுடைய முழு கவனமும் பேட்டிங் செய்வதில் தான் இருந்தது . ஆனால் டிரிங்க்ஸ் இடைவேளையில் நான் ரகானேவிடம் , டிம் பெய்ன் இந்த டெஸ்ட்டில் சதம் விளாசினால் என்னுடைய பாஸ்-டம் சொல்லி அவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுக்க சொல்வேன் என நகைச்சுவையுடன் கூறினேன் என ரோகித் சர்மா தெரிவித்தார்.

கதைக் கரு:

இன்றைய இரண்டாவது இன்னிங்ஸில் ஜடேஜா சுழலில் டிம் பெய்ன் ரிஷப் ஃபன்ட் - டிடம் 28 ரன்களில் கேட்ச் ஆனார் . இவரது விக்கெட்டை மும்பை இந்தியன்ஸ் அணி தனது டிவிட்டர் பக்கத்தில் வசைபாடியுள்ளது.

டிம் பெய்ன் 2வது இன்னிங்ஸில் 67 பந்துகளில் 26 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார் . இந்த விக்கெட் பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது . டிம் பெய்னின் சதமடிக்கும் மிஷன் தோல்வியடைந்து விட்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் அவருக்கு இடம் கிடையாது.

அடுத்தது என்ன ?

இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களை அடித்துள்ளது. இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க மெல்போர்ன் டெஸ்ட்டில் வெற்றி பெற இன்னும் 2 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

Quick Links

Edited by Fambeat Tamil