ஐ.பி.எல் சீசன் 11 தொடங்க இன்னும் சிறு மாதங்களே உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணிகள் ட்விட்டரில் மோதிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணிகள் ஐ.பி.எல் போட்டிகளில் மிகவும் பிரபலமான அணிகள். இவ்விரண்டு அணிகளும் பங்கேற்கும்போது களத்தில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இருக்காது. அப்படி இருக்கும்போது, அடுத்த சீசன் தொடங்கும் முன்பே இவ்விரு அணிகளும் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றிக் கேலியும் கிண்டலும் செய்துக்கொண்டனர்.
அடுத்த சீசன் தொடங்கும் முன்பே இப்படி மோதிக்கொள்ளும் இவ்விரு அணிகளும் களத்தில் எப்படி விளையாடிக் கொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள படத்தைப் பதிவிட்டு, "இம்மூன்று ஆல் ரவுண்டர்களை மிஞ்சும் வீரர்கள் உள்ளனரா? நாங்கள் காத்திருக்கிறோம்" என்று ஒரு பதிவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டது.
அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலே சன்ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணியிடமிருந்து பதிலுக்கு ஒரு பதிவு வந்தது.
அது என்ன பதிவென்றால், அந்த அணியின் முக்கிய வீரர்களான ஆப்கானிஸ்தானை சேர்ந்த முகமத் நபி மற்றும் சுழல் ஜாம்பவான் ரஷீத் கான் புகைப்படத்தோடு பங்களாதேஷை சேர்ந்த ஆல் ரவுண்டர் ஷகிப் உல் ஹசன் ஆகிய மூவரும் சேர்ந்து எடுத்துக்கொண்டு ஒரு புகைப் படத்தைப் பதிவிட்டு, "காத்திருப்பு முடிந்த்தது" என்று சன்ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணி ட்வீட் செய்தது.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத மும்பை அணி பதிலுக்குச் சன்ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணியைக் கிண்டல் செய்யும் விதமாக கீழே உள்ள படத்தை சன் ரைஸரின் பதிலடி ட்வீட் செய்தது.
அதிலே மூன்று ஐ.பி.எல் கோப்பை புகைப்படத்துடன் "காத்திருப்பு தொடர்க்கிறது. இன்னும் முடியவில்லை" என்று கேலி செய்யும் விதமாக இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறை ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளது. அதேபோல் ஒரே ஒரு முறை மட்டுமே ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளது சன்ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணி.
இந்த வார்த்தை போருக்கு நடுவே யாரும் எதிர்பார்க்காத விதமாக சென்னை அணியின் ட்விட்டர் பக்கத்தில் மகேந்திர சிங் தோனியின் புகைப்படத்தையே மூன்றாக பதிவிட்டு "மூன்று முகம்" என்று ட்வீட் வந்தது. எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் இருந்தது இந்த பதிவு. சமூக வலைத்தளத்தில் மிகவும் ட்ரெண்டான இந்த புகைப்படம், அதிக பார்வையாளர் கவனத்தை ஈர்த்தது.
ட்விட்டரிலேயே இப்படி மோதல் கொண்டுள்ளதால் இதற்கு அடுத்து தொடங்கவிருக்கும் ஏலத்திலும் இதே போன்று நடக்க வாய்ப்பிருக்கமா என்று ரசிகர்களிடம் ஆர்வம் அதிகமாகி உள்ளது.
பல்வேறு அணிகள் சில முக்கியமான மாற்றங்களை செய்து தங்களது அணிகளை பலப்படுத்தும் நோக்குடன் இருக்கின்றனர்.பலர் நிர்வாக ரீதியாக மாற்றங்களை செய்து வருகின்றனர்.
வீரர்களை தக்கவைத்துக்கொள்ள கடைசி தேதி நவம்பர் 15 என்றும், அடுத்த சீசனுக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஜெய்ப்பூரில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.