இங்கிலாந்து ரசிகர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் ஆகிய இருவரை ஏளனப்படுத்தியதைக் கண்டு தான் அதிர்ச்சியடையவில்லை என ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் நாதன் லயான் தெரிவித்துள்ளார். டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் ஆகியோருக்கு உலகக் கோப்பை மற்றும் அதைத் தொடர்ந்து வரும் ஆஸஸ் ஆகிய தொடர்களில் கண்டிப்பாக இங்கிலாந்து ரசிகர்களால் ஏளனப்படுத்தப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகளில் மிகவும் கடுமையான வார்த்தைகளால் இவர்கள் இருவரும் தாக்கப்படுவர்.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னர் ஒரு வருட தடைக்கு பிறகு தங்களது முதல் போட்டியில் இங்கிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது இங்கிலாந்து ரசிகர்களால் "மோசடிக்காரர்" என்று கடுமையாக ஒலி எழுப்பி அவர்களது மனதை காயப்படுத்தினர். இருப்பினும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மற்றும் துனைக் கேப்டன் ஸ்மித் மற்றும் வார்னர் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் முன்னணி அணியாக இங்கிலாந்து திகழ்கிறது என்று பல கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் கணித்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவர்களின் மோசமான ஆட்டத்திறனை கண்டு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சற்று அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
இங்கிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் டேவிட் வார்னர் 43 ரன்களையும், ஸ்டிவன் ஸ்மித் ஆட்டத்தின் வெற்றிக்கு காரணமான 112 ரன்களையும் விளாசினார்கள். உலகக் கோப்பையை தொடர்ந்து நடைபெற உள்ள ஆஸஸ் தொடருக்கும் வார்னர் மற்றும் ஸ்மித் தங்களது கடுமையான காலங்களில் சிறப்பாக தயராகி வருகின்றனர். இதற்கிடையில் இங்கிலாந்து ரசிகர்களை நாதன் லயான் "இரக்கமற்ற மனிதர்கள்" என்று கூறியுள்ளார்.
நாதன் லயான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது,
"இங்கிலாந்து ரசிகர்களிடமிருந்த இந்த செயலை நான் எதிர்பார்த்தது தான். இங்கு அவர்களின் இரக்கமற்ற குணம் வெளிப்படுகிறது."
"இங்கிலாந்தில் நான் இரு ஆஸஸ் தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று உள்ளேன். ஆனால் எனக்கு இங்கிலாந்துடனான கிரிக்கெட் போட்டி மோசமான அனுபவமாகவே அமைந்துள்ளது. இங்கு உள்ள ரசிகர்கள் சிறிது கூட அன்பு இல்லாமல் இரக்கமற்றவர்களாக திகழ்கின்றனர். கடைசி 12 மாதங்களாக இவர்களது இந்த செயலை திருத்திக் கொள்ளவில்லை.
ஆஃப் ஸ்பின்னரான இவர் மேலும் கூறியதாவது, எத்தகைய இடற்பாடுகள் வந்தாலும் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணிக்காக அளிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
"என்னுடைய ஆட்டத்திறன் எப்பொழுதும் எத்தைகைய சூழ்நிலையிலும் ஒரே மாதிரியாக இருக்கும். எங்களுடைய இதயத்தை திடப்படுத்தி கொண்டு இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை கையாள்வோம். உலகக் கோப்பை தொடரில் அனைத்து அணியினருக்கு எதிராகவும் எங்களது சிறப்பான ஆட்டம் வெளிப்படும்.
மே 30 அன்று தொடங்க உள்ள உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது. முன்னாள் சேம்பியன் ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் ஜீன் 1 அன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.