நடந்தது என்ன?
நேபாள் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் ( யு.ஏ.இ ) சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது . இதன் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது . இதில் ரோகித் பாடேல் அரை சதம் விளாசி நேபாள் அணியின் வெற்றிக்கு உதவினார் . இவரது அரை சதத்தின் மூலம் இளம் வயதில் சர்வதேச அரைசதம் விளாசியோர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் .
16 வருடம் 146 நாட்கள் வயதுள்ள ரோகித் பாடேல் சர்வதேச அரைசதமடித்து இதற்கு முன் இந்த சாதனையை வைத்திருந்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் சாகித் அப்ரிடியின் சாதனையை முறியடித்துள்ளார்.
உங்களுக்கு தெரியுமா ?
நேபாள் அணி யு .ஏ .இ நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஓடிஐ, டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த தொடர் துபாயில் உள்ள ஐசிசி அகடாமி மைதாத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் யு.ஏ.இ 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1 - 0 என முன்னிலையில் இருந்தது.
நேபாள் அணி இன்று நடந்த இரண்டாவது போட்டியில் அருமையாக விளையாடி 145 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிறப்பான பதிலடியை யு.ஏ.இ அணிக்கு அளித்து 1-1 என தொடரை சமன் செய்துள்ளது.
கதைக்கரு
முதல் ஒருநாள் போட்டிகளில் மோசமாக விளையாடிய நேபாள் பேட்ஸமேன்கள் இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி உள்ளனர். ரோகித் பாடேல்-ன் சிறப்பான பேட்டிங்கால் நேபாளின் வெற்றிக்கு மிகவும் உதவியாக இருந்தது. இவர் 58 பந்துகளை எதிர்கொண்டு 55 ரன்களை அடித்தார்.
இவரது இந்த இன்னிங்ஸ் மூலம் இளம் வயதில் சர்வதேச அரைசதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 16 ஆண்டு 213 நாளில் பாகிஸ்தானிற்கு எதிராக 59 ரன்கள் அடித்துள்ளார். அதற்கு பிறகு சாகித் அப்ரிடி 16 ஆண்டு 217 நாளில் இலங்கை அணிக்கு எதிராக அரைசதம் அடித்தார். இவர்கள் இருவர் மட்டுமே குறைந்த வயதில் சர்வதேச அரைசதம் அடித்த வீரர்களாக வலம் வந்தனர்.
வலதுகை பேட்ஸ்மேன் ரோகித் பாடேல் தனது 3வது சர்வதேச போட்டியிலேயே 7 பவுண்டரிகளுடன் 55 ரன்களை விளாசியுள்ளார்.
அடுத்தது என்ன ?
ரோகித் பாடேல் தற்போது அதிகம் மதிப்பிடப்பட்டுள்ள மற்றும் நல்ல ஆட்டத்திறனை கொண்டு விளங்கும் வீரராக நேபாள் அணியில் திகழ்கிறார். 2016 ஆசிய கோப்பையில் ரோகித் பாடேல் , இந்திய இளம் ஸ்பிட் ஸ்டார் கம்லேஷ் நாகர்கோட்டியின் பந்துவீச்சில் 5 பந்துகளில் 24 ரன்களை விளாசியுள்ளார்.
சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்ததன் மூலம் வருங்கால நேபாள் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக ரோகித் பாடேல் திகழ்வார் என்பது சந்தேகமில்லா உண்மையாகும்.
எழுத்து : மோஸின் கமல்
மொழியாக்கம் : சதீஸ் குமார்