புதிய யுக்தியை கையாளும் ஆஸ்திரேலிய அணி- வீரர்களுக்கு பழைய சீருடை

Australia's New ODI Jersey
Australia's New ODI Jersey

சமீபகாலமாக கிரிக்கெட்டில் பல தோல்விகளைச் சந்தித்து துவண்டு போயுள்ளது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு புது யுக்தியை கையாண்டு உள்ளது. அதாவது 1980களில் பயன்படுத்திய சீருடையை போன்ற ஒன்றை இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் அணிய உள்ளனர் அந்த அணியினர்.

ஒருநாள் தொடர்:

இந்திய அணி ஆஸ்திரேலியவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில், டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. எனவே இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை மறுநாள் சிட்னியில் தொடங்குகிறது. இதற்கான இரண்டு அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சீருடை:

மேலும் இதில் கலந்து கொள்ளும் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்தியுள்ளது. வீரர்கள் அனைவரும் அந்த புதிய சீருடையுடன் சிட்னி ஆடுகளத்தில் புகைப்படம் எடுத்து அந்த சீருடையை அறிமுகப்படுத்தினர்.

மேலும் இதுகுறித்து அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான பீட்டர் சிடில் கூறியதாவது, " இந்த சீருடையானது எங்களுக்கு பழைய ஞாபகங்களை புகுத்தி ஒரு புதிய உந்து சக்தியை ஏற்படுத்துகிறது. நாங்கள் சிறுவயதில் கிரிக்கெட் மீது கொண்ட பற்றால் 90களில் இதே உடையை குழந்தைப் பருவத்தில் அணிந்து மகிழ்ச்சி கண்டோம். இப்பொழுது இதே சீருடையை அணியும் போது மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது. இதே வடிவிலான சீருடையை அணிந்து எங்களது முன்னாள் வீரர்கள் பலர் சாதித்துள்ளனர். அதை நினைவு கூறும்பொழுது, நாமும் இதனை போன்று சாதிக்க தூண்டுகிறது. இந்தியாவிற்கு எதிரான மூன்று போட்டிகளிலும் இதே சீருடையை அணிந்து விளையாட உள்ளோம். இது எங்கள் விளையாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்" என அவர் கூறினார்.

பயிற்சியில் இந்தியா அணியினர்:

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்த போட்டி நாளை மறுநாள் சிட்னியில் தொடங்குகிறது. இதற்கான பயிற்சியில் இரண்டு அணிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் இந்தியா அணியின் டோனி, ராயுடு, கேதார் ஜாதவ் ஆகியோர் நேற்று சஞ்சய் பங்கர் தலைமையில் பயிற்சில் ஈடுபட்டனர். நேற்றும் சிட்னியில் மழை தொடர்ந்ததால் உள்ளரங்க கூடத்தில் பயிற்சியை தொடர்ந்தனர். இன்று மீதமுள்ள அனைத்து இந்திய வீரர்களும் பயிற்சியில் இணைந்தனர். இதில் கோஹ்லி மற்றும் டோனி ஆகியோர் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

மேலும் ஒருநாள் தொடர் பற்றி ரோஹித் ஒரு பேட்டியில் கூறியதாவது, "ஆஸ்திரேலியாவிற்கு எதிராக எப்பொழுது விளையாடினாலும் அது கடினமானாகத் தான் இருக்கும். சென்ற முறைகூட எங்களை அவர்கள் 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் ஓய்வு பெற்றாலும் , அணியில் இடம்பெற்றுள்ள பல வீரர்கள் திறமையானவர்கள். அவர்கள் எங்களுக்கு மிகுந்த சவால் அளிப்பது நிச்சயம். மேலும் இந்த இந்தியா அணியே ஏறக்குறைய 2019 உலகக்கோப்பையில் பங்குபெரும். வீரர்களின் காயம் மற்றும் ஆட்டத்திறன் பாதிக்காத வரையில் இவர்கள் அனைவரும் அப்படியே அணியில் தொடர்வர். மேலும் டோனி எங்களுக்கு கலங்கரை விளக்கம் போல் , அவர் அணியில் இருந்தால் ஒருவித அமைதி சூழ்ந்து ஒரு தெளிவு ஏற்படும். இது அணிக்கு மிகவும் தேவையான ஒன்று". இவ்வாறு அந்த பேட்டியில் ரோஹித் கூறினார்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now