2019 ஐபிஎல் போட்டி மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தேர்தல் தேதிகள் அறிவித்த பின்பு போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிடும். இந்த அறிவிப்பு பல குழப்பங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. 2019 ஆம் ஆண்டு மே மாதம் தேர்தல் இருக்கின்ற காரணத்தினால் ஐபிஎல் போட்டிகள் வெளிநாடுகளுக்கு மாற்றப்படும் எனவும் அல்லது பாதி போட்டிகள் இந்தியாவிலும் மீதி போட்டிகள் வெளிநாடுகளிலும் நடத்தப்படும் எனவும் விதமான செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் நேற்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக ஐபிஎல் இந்தியாவில் நடைபெறும் என அறிவித்தது மேலும் மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
வழக்கமாக ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் சொந்த ஊரில் ஒரு போட்டியும் எதிரணியின் ஊரில் ஒரு போட்டியும் ஆடுவது வழக்கம. தேர்தலை கருத்தில் கொண்டு ஐபிஎல் வாரியம் இதனை மாற்றி அமைக்க உள்ளது. ஒவ்வொரு அணியும் சொந்த ஊரில் வெறும் மூன்று போட்டிகளை ஆட வாய்ப்பு உள்ளது. மற்ற போட்டிகள் அவர்கள் பொதுவான ஒரு இடத்தில் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேதிகளை பொறுத்து போட்டிக்கான அட்டவணையும் அதன் நடைபெறும் இடங்களையும் வெளியிடும்.
சென்ற வருடமும் சென்னையில் வெகு சில போட்டிகளே நடந்தன. போட்டிகள் புனேவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த வருடமும் சென்னை ரசிகர்கள் அதிகளவு போட்டிகளைப் பார்க்க முடியாது என்பது வருத்தத்திற்குரியது. அவர்கள் போட்டிகளைப் பார்க்க முடியவில்லை என்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் லைவ் என்று அவர்களுக்கு விருந்து படைத்தது. இந்த வருடமும் ரசிகர்கள் சென்னை அணி கோப்பையை வெல்லும் என்று ஆர்வத்துடன் ஐபிஎல் தொடருக்காக காத்துள்ளனர்.
பிசிசிஐ ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணையை பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி அல்லது மூன்றாம் தேதி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டி வருகிற மே மாதம் 30-ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ள நிலையில், ஐபிஎல் போட்டி முன்னதாகவே தொடங்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டது. அவை இந்தியாவில் நடக்கும் அல்லது வெளிநாடுகளில் நடக்குமா என்பது மட்டுமே கேள்விக்குறியாக இருந்து வந்தது. நடக்கும் என்ற அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது, இருந்தபோதிலும் அவர்கள் தனது சொந்த அணியை சொந்த ஊரில் வெறும் 3 போட்டிகளே மட்டுமே பார்க்கமுடியும் என்பது மறுக்க முடியாது.
மார்ச் 23ம் தேதி தொடங்கும் கிரிக்கெட் திருவிழா ஜூலை மாதம் உலகக் கோப்பை முடிவடையும்போது நிறைவடையும். எனவே கிரிக்கெட் ரசிகர்களுக்கு நான்கு மாத கோலாகல கிரிக்கெட் திருவிழா காத்திருக்கிறது.
உலககோப்பை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஐபில் அணியும் தனது அணி வீரர்களை அதிக வேலைப்பளு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது உலககோப்பை வீரர்களை ஐபிஎல் விளையாடும்போது கூர்மையாக கவனித்து வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பை, தனது இழந்த ஃபார்மை மீட்க வீரர்கள் கடுமையாக முயற்சி செய்வர். இதனால் இந்த வருட ஐபிஎல் தொடரும் களைகட்டும் என்பதில் சந்தேகமில்லை.