சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகாத வீரருக்கு மத்திய ஒப்பந்தத்தை அளித்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்

Will young
Will young

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்ட வந்த மத்திய ஒப்பந்தத்தை தற்போது எந்தவித சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத "வில் யங்" என்ற வீரருக்கு அளித்துள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம். இதற்கு முக்கிய காரணம் உள்ளூர் கிரிக்கெட்டில் இவரது சிறந்த ஆட்டத்திறனே ஆகும். இதனால் இவருக்கு வங்க தேசத்திற்கு எதிரான நியூசிலாந்து டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தது. 3வது டெஸ்ட் போட்டியில் "வில் யங்"-ஐ களமிறக்க நியூசிலாந்து திட்டமிட்டிருந்து. ஆனால் 3வது போட்டி நடக்காமல் போனது. இவர் தனது சர்வதேச போட்டிகளின் அறிமுகத்திற்கு மேலும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வில் யங்-ற்கு மத்திய ஒப்பந்தத்தை வழங்கி அவரை உற்சாகப் படுத்தியுள்ளது.

நியூசிலாந்து அணியின் முன்னணி ஆட்டக்காரர் டிம் செய்ஃபேர்-ற்கு மத்திய ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. 2019 உலகக் கோப்பை தொடரிலாவது இடம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த டிம் செய்பெர்டிற்கு அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது. டாம் லேதமிற்கு பேக்-அப் வீரராக சர்வதேச கிரிக்கெட் விளையாடத டாம் பிளன்டல் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். இந்த இடத்தில் டிம் செய்பெர்ட் இடம்பெறததாதன் காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம். இதனை கருத்தில் கொண்டே நியூசிலாந்து தேர்வுக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஜீம்மி நிஷம் 15 பேர் கொண்ட நியூசிலாந்து உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். 28 வயதான ஆல்-ரவுண்டர் ஜீம்மி நிஷம் தனது சிறப்பான ஆட்டத்தால் மீண்டும் சர்வதேச அணியில் இடம்பிடித்தார். நியூசிலாந்தின் மத்திய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார்.

இவருடன் டாம் பிளன்டலும் மத்திய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். டாம் பிளன்டல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகவில்லை. இவர் உலகக் கோப்பை அணியிலும் இடம்பெற்றுள்ளார். உலகக் கோப்பையில் நியூசிலாந்து ஆடும் XI-ல் இவர் விளையாடுவது சற்று கடினம். ஏனெனில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் டாம் லேதமிற்கே நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிக முன்னுரிமை கொடுக்கும். பிளன்டல் 2017ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிஜே வாட்லிங்-ற்கு பதிலாக நியூசிலாந்து அணியில் இடம்பெற்று டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமும் ஆனார். தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசினார். அத்தொடருக்கு பின் பிஜே வாட்லிங் மீண்டும் நியூசிலாந்து அணிக்கு திரும்பியதால் பிளன்டல் நீக்கப்பட்டார்.

ஆடம் மில்னே, கோரி ஆன்டர்சன், ஜார்ஜ் வோர்கர் ஆகிய 3 வீரர்கள் நியூசிலாந்து மத்திய ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர். மார்டின் கப்தில், கானே வில்லியம்சன், ராஸ் டெய்லர், டிம் சௌதி, டிரென்ட் போல்ட் மற்றும் சிலர் வழக்கமாக நியூசிலாந்து மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஆவார். நியூசிலாந்து அறிவித்துள்ள இந்த மத்திய ஒப்பந்தத்தை வீரர்களின் விருப்பத்திற்கு ஒரு வாரம், அதாவது மே 9 வரை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் காலக்கெடுவை அளித்துள்ளது.

நியூசிலாந்து அணி அடுத்ததாக 2019 உலகக் கோப்பையில் தான் சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் நியூசிலாந்து தனது முதல் போட்டியில் ஜீன் 1 அன்று இலங்கையை எதிர்கொள்ள இருக்கிறது.

இனிவரும் போட்டிகளில் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள மத்திய ஒப்பந்த வீரர்கள்:

டோட் ஆஸ்டல், டாம் பிளன்டல், டிரென்ட் போல்ட், காலின் டி கிரான்ட் ஹாம், லாக்கி பெர்குசன், மார்டின் கப்தில், மேட் ஹான்றி, டாம் லேதம், காலின் முன்ரோ, ஜீம்மி நிஷம், ஹான்றி நிக்கோல்ஸ், ஜீட் ரவால், மிட்செல் சான்ட்னர், ஸ்சோதி, டிம் சௌதி, ராஸ் டெய்லர், பிஜே வாட்லிங், நெய்ல் வாக்னர், கானே வில்லியம்சன், வில் யங்.

Quick Links