இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த பயணத்தின் ஒரு நாள் தொடரில் ஒரு சதம் கூட அடிக்கப்படவில்லை. இதைப் பற்றியும் மேலும் இந்த சுற்றுப்பயணத்தின் சிறப்பு அம்சங்களைப் பற்றியும் இங்கு விரிவாக காண்போம்.
இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடர் ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதன் பின்பு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமீப காலமாக தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடி வருகிறார் என்ற காரணத்தினால் அவருக்கு கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.
அதன் பின்பு கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படு தோல்வி அடைந்தது. இந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 100 ரன் அடிப்பதற்குள் ஆல் அவுட் ஆகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சதம் கூட இல்லாத நியூசி தொடர் :
இந்த ஒருநாள் தொடரில் எந்த வீரரும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இந்த தொடரில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் 93 ரன்கள் அடித்தார். அவர் அடித்த இந்த ரன்களே இந்த தொடரின் அதிகபட்ச ரன் ஆகும்.
அதிக ரன்கள் மற்றும் பவுண்டரிகள் அடித்த வீரர்கள் :
இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அம்பத்தி ராயுடு முதல் இடத்தில் உள்ளார். இவர் மொத்தம் ஐந்து ஒருநாள் போட்டிகளில் 190 ரன்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலிலும் இவர் தான் முதலிடத்தில் உள்ளார். இவர் மொத்தம் ஆறு சிக்ஸர்களை விளாசி உள்ளார். மேலும் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்களின் பட்டியலில் தவான் முதலிடத்தில் உள்ளார். இவர் மொத்தம் 24 பவுண்டரிகளை இந்த தொடரில் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் :
இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் போல்ட் முதலிடத்தில் உள்ளார். இவர் மொத்தம் ஐந்து போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நான்காவது ஒரு நாள் போட்டியில் இவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர் ஆட்டநாயகன் விருது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு வழங்கப்பட்டது.