உலக கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

Pravin
நியூசிலாந்து அணி
நியூசிலாந்து அணி

2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு மாதத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த முறை உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதும் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளனர். உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30 முதல் ஜுலை 14 வரை நடைபெற உள்ளது. இதுவரை உலக கோப்பை தொடர் ‘ஏ’ பிரிவு மற்றும் ‘பி’ பிரிவு என்று பிரிவுகள் அடிப்படையில் நடைபெற்று வந்த நிலையில் இந்த முறை ஒரே பிரிவில் பத்து அணிகளும் பங்கேற்று மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை எதிர்கொள்கின்றனர். இந்த உலக கோப்பை தொடரில் லீக் போட்டிகள் மட்டும் 45 போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள் விவரம்: இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை.

உலக கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒரு மாத காலம் தான் இருக்கும் நிலையில் அணிகள் தங்களின் உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நியூசிலாந்து அணி முதல் அணியாக தங்களின் 15 வீரர்களை கொண்ட உலக கோப்பை அணியை அறிவித்துள்ளது.

நியூசிலாந்து உலக கோப்பை அணி
நியூசிலாந்து உலக கோப்பை அணி

நியூசிலாந்து அணியின் உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்களின் விவரம்: (கேப்டன்) கேன் வில்லியம்சன், மார்டின் கப்தில், ராஸ் டெய்லர், கோலின் முன்ரோ, டிம் சௌவ்தி, டிரன்ட் போல்ட், மிட்ச்சில் சான்டனர், டாம் லேதம், கோலின் டி கீராண்டோம், ஜேம்ஸ் நீஷம், ஹென்றி நிக்கோலஸ், பெர்குசன், மேட் ஹென்றி, டாம் புளுன்டெல், இஸ் ஜோதி.

நியூசிலாந்து அணி அறிவித்துள்ள உலக கோப்பை அணி ஐந்து வேகபந்து வீச்சாளர்களும், இரண்டு சுழல் பந்து வீச்சாளர்களும், மூன்று ஆல்-ரவுன்டர்ஸ் மற்றும் ஏழு பேட்ஸ்மென்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளனர். இந்த நியூசிலாந்து அணியில் ஏழு வீரர்கள் வேகபந்து வீச்சாளர்கள் இடம் பெற்று உள்ளனர் ஏன்னெனில் உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளதால் வேகபந்து வீச்சாளர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும்.

நியூசிலாந்து அணி உலக கோப்பை தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணியை ஜுன் 1ம் தேதி எதிர்கொள்கிறது. இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியை ஜுன் 5ம் தேதி எதிர்கொள்கிறது. மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஜுன் 8ம் தேதி எதிர்கொள்கிறது. நான்காவது போட்டியில் இந்தியாவை 13ம் தேதி எதிர்கொள்கிறது. ஐந்தாவது போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை 19ம் தேதி எதிர்கொள்கிறது. ஆறாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியை 22ம் தேதி எதிர்கொள்கிறது. ஏழாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை 26ம் தேதி எதிர்கொள்கிறது. எட்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 29ம் தேதியும் இங்கிலாந்து அணியை ஜுலை 3ம் தேதியும் எதிர்கொள்கிறது.

Quick Links

Edited by Fambeat Tamil