இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணி 4-1 என ஒருநாள் தொடரை வென்றுள்ளது. அடுத்தாக 3 டி20 போட்டிகள் தொடரின் முதல் டி20 போட்டி இன்று (பிப்ரவரி 6) வெல்லிங்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி நண்பகல் 12:30ற்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங்கை தேர்வு செய்தது.
இந்திய XI : ரோகித் சர்மா(கேப்டன்), தவான், ரிஷப் ஃபன்ட், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருநால் பாண்டியா, யுஜ்வேந்திர சகால், கலீல் அகமது, புவனேஸ்வர் குமார்,
நியூசிலாந்து XI : காலின் முன்ரோ, டிம் செய்ஃபெர்ட்(விக்கெட் கீப்பர்),கானே வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டார்ல் மிட்செல், காலின்-டி-கிரான்ட் ஹோம், மிட்செல் சான்ட்னர், ஸ்காட் குஜெலுஜின், டிம் சவ்தி,லாக்கி பெர்குஸன், ஸ்சோதி.
நியூசிலாந்து அணியில் டிம் செய்ஃபெர்ட் மற்றும் காலின் முன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். புவனேஸ்வர் குமார் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார். அவருடன் முதல் பவர்பிளே-வில்(1-6 ஓவர்கள்) கலீல் அகமது வீசினார்.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். முதல் பவர்பிளேவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் சேர்த்தது.8.1 வது ஓவரில் டிம் செய்ஃபெர்ட் தனது முதல் சர்வதேச அரை சதத்தை விளாசினார். 8.2 வது ஓவரில் க்ருநால் பாண்டியா வீசிய பந்தில் காலின் முன்ரோ விஜய் சங்கர்-ரிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 20 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களை அடித்தார். இவர்களது பார்ட்னர் ஷிப்பில் நியூசிலாந்து அணிக்கு 86 ரன்கள் வந்தது. அதன்பின் செய்ஃபெர்ட் தனது முழு அதிரடியை வெளிபடுத்த ஆரம்பித்தார்.
12.4வது ஓவரில் கலீல் அகமது வீசிய பந்தில் டிம் செய்ஃபெர்ட் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 43 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 84 ரன்களை அடித்தார்.ஹர்திக் பாண்டியா வீசிய 14.6வது ஓவரில் டார்ல் மிட்செல் 8 ரன்களில் தினேஷ் கார்த்திக்-டம் கேட்ச் ஆனார்.அடுத்த ஓவரிலேயே சகால் வீசிய பந்தில் கானே வில்லியம்சன் , ஹர்திக் பாண்டியா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 22 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்களுடன் 34 ரன்களை அடித்தார்.
16.5வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் காலின் டி கிரான்ட் ஹாம் 3 ரன்களில் ( மாற்று ஆட்டக்காரர்) முகமது சிராஜ்-டம் கேட்ச் ஆனார். 18.1 வது ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில் ராஸ் டெய்லர் 23 ரன்களில் , கலீல் அகமது-விடம் கேட்ச் ஆனார். 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, புவனேஸ்வர் குமார்,சகால், க்ருநால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதுவரை நியூசிலாந்து-இந்திய அணிகள் மோதிய டி20 தொடர்களில் இதுவே அதிக ரன்களாகும்.
220 என்ற இலக்குடன் ரோகித் சர்மா மற்றும் தவான் களமிறங்கினர். டிம் சௌதி முதல் ஓவரை வீசினார்.2.2 வது ஓவரில் டிம் சௌதி வீசிய பந்தில் ரோகித் சர்மா 1 ரன்களில் லாக்கி பெர்குஸன்-டம் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர், தவானுடன் சேர்ந்து சிறிது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 5.5 வது ஓவரில் லாக்கி பெர்குஸன் வீசிய பந்தில் தவான் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 18 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 29 ரன்களை அடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் ஃபன்ட் 8.2 வது ஓவரில் மிட்செல் சான்டனர் வீசிய பந்தில் 4 ரன்களில் போல்ட் ஆனார். அதே ஓவரின் 4வது பந்தில் விஜய் சங்கர்-ரும் , காலின் டி கிரான்ட் ஹாம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 18 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 27 ரன்களை அடித்தார்.
10.2வது ஓவரில் ஸ்சோதி வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக் 5 ரன்களில் டிம் சௌதியிடம் கேட்ச் ஆனார். பின்னர் அதே ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியா 4 ரன்களில் டார்ல் மிட்செல்-டம் கேட்ச் ஆனார். தோனியுடன் சேர்ந்து நிதானமான விளையாடி வந்த க்ருநால் பாண்டியா டிம் சௌதி வீசிய பந்தில் செய்ஃபெர்ட்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 18 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி மற்றும் 1 சிகஸருடன் 20 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய புவனேஸ்வர் குமார் , லாக்கி பெர்குஸன் வீசிய பந்தில் செய்ஃபெர்ட் -டம் 1 ரன்களில் கேட்ச் ஆனார்.
18.6வது ஓவரில் டிம் சௌதி வீசிய பந்தில் சிறப்பாக விளையாடிய தோனி , லாக்கி பெர்குஸன்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 31 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 39 ரன்களை அடித்தார். பின்னர் 19.4வது ஓவரில் டார்ல் மிட்செல் வீசிய பந்தில் சகால் போல்ட் ஆனார். இந்த விக்கெட்டின் மூலம் இந்திய அணி தனது கடைசி விக்கெட்டையும் இழந்து 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் மோசமான தோல்வியை தழுவியது
நியூசிலாந்து அணி சார்பில் டிம் சௌதி 3 விக்கெட்டுகளையும், ஸ்சோதி, லாக்கி பெர்குஸன் , மிட்செல் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும் , டார்ல் மிட்செல் 1 விக்கெவீழ்த்தினர். சிறப்பாக பேட்டிங் செய்த டிம் செய்ஃபர்ட் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 அக்லாந்தில் பிப்ரவரி 8 அன்று நடைபெறவுள்ளது.