நியூஸிலாந்து vs இந்தியா 2019: முதல் ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்புள்ள XI வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை வென்ற இந்தியா தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இவ்வெற்றியை தாண்டி நீண்ட நாள் இந்திய அணியின் சவாலாக இருந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கான தீர்வும் கிடைத்தது. இக்கட்டான சூழ்நிலையில் அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து பொறுப்புடன் ஆடினார்கள். இந்திய அணிக்கு அடுத்த சவாலாக அமைய இருப்பது நியூஸிலாந்து அணிக்கு எதிராக. நியூஸிலாந்து மண்ணில் நடக்கவுள்ள இத்தொடரில் 5 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டியில் பங்கேற்கவுள்ளது இந்தியா. முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 23ம் தேதி நேப்பியரில் நடைபெறும்.

ஆஸ்திரேலிய அணியை வென்ற உற்சாகத்தில் இந்திய அணியும், இலங்கை அணியை வென்ற பூரிப்பில் நியூஸிலாந்து அணியும் இருக்கும் இச்சமயத்தில் இவ்விரு அணிகளுக்குமிடையேயான போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுவாரசியமாக அமையும். டாம் லாதம், டீ கிராண்ட்ஹோம், சாண்ட்னெர் ஆகியோரின் வருகையால் பலமாக உள்ளது நியூஸிலாந்து. அதேபோல் சொந்தமண்ணில் அவர்களை வீழ்த்த வேண்டும் என்று விராட் கோஹ்லி தலைமையிலான அணி காத்துக்கொண்டிருக்கிறது.

உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணியில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்புள்ள 11 வீரர்கள் பற்றிய தொகுப்பை காணலாம்.

#1 ரோஹித் ஷர்மா

ரோஹித் ஷர்மா 
ரோஹித் ஷர்மா

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தனியாக இந்திய அணியின் வெற்றிக்கு போராடி வீழ்ந்தார். இருப்பினும் அனைவரின் பாராட்டையும் பெற்ற ரோஹித் 133 ரன்கள் குவித்தார். இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் அணியின் வெற்றிக்கு இவரின் ஆட்டம் அடித்தளமாக அமைந்தது. சிக்ஸர்கள் அடிப்பதில் வல்லவரான ரோஹித் ஷர்மாவிற்கு நியூஸிலாந்து போன்ற சிறிய மைதானம் நிச்சயம் கைகொடுக்கும். இருப்பினும் முதலில் போல்ட் மற்றும் சவுதி ஆகியோரின் ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்க வேண்டும்.

#2 ஷிகர் தவான்

ஷிகர் தவான் 
ஷிகர் தவான்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியிலும் இவர் பெரிதாக சாதிக்கவில்லை. வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்த இவரைவிட்டால் வேறு தொடக்க ஆட்டக்காரர்கள் இல்லை எனலாம். இவரின் முந்தய ஆட்ட திறனை மனதில் வைத்து நிர்வாகம் மீண்டும் இவருக்கு வாய்ப்பு வழங்கும். இழந்த பார்மை மீட்க ஓரிரு ஆட்டம் போதும் என்பதால் தவான் மீண்டும் தன் வழக்கமான பார்மை மீட்பார் என்பதில் சந்தேகமில்லை.

#3 விராட் கோஹ்லி

விராட் கோஹ்லி
விராட் கோஹ்லி

இந்திய அணியின் கேப்டனான இவர் அணியின் தூணாக இருந்து பல போட்டிகளில் வெற்றி தேடி தந்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தனது 39வது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார். இறுதி ஒருநாள் போட்டியிலும் தோனியுடன் ஜோடி சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு நல்ல பார்ட்னெர்ஷிப் கொடுத்தார். ஆஸ்திரேலியாவை விட அதிக பலமாக காணப்படும் நியூஸிலாந்து அணி இவரின் பார்முக்கு நல்ல பரீட்சையாக அமையும்.

#4 மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி

பல விமர்சனங்களையும், போராட்டங்களையும் தாண்டி இழந்த பார்மை மீட்ட தோனி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் சாதித்து தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். முன்னாள் இந்திய அணியின் கேப்டனான இவர்,இறுதியாக விளையாடிய மூன்று ஒருநாள் போட்டியிலும் அரை சதம் அடித்தார். உலகக்கோப்பை வரவுள்ள நிலையில் இவரின் பார்ம் இந்திய அணிக்கு மிகுந்த பலம். பல நாள் பிரச்சனையான இந்திய அணியின் நான்காவது வீரர் இடத்தையும் பூர்த்தி செய்துள்ளார். பேட்டிங்கை தாண்டி இவரின் விக்கெட் கீப்பிங் திறமை அணிக்கு கூடுதல் உத்வேகம்.

#5 கெதர் ஜாதவ்

கெதர் ஜாதவ்
கெதர் ஜாதவ்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஜாதவ் மூன்றாவது போட்டியில் ராயுடுவிற்கு மாற்று வீரராக களமிறக்கப்பட்டார். தனது தேர்வை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர், தோனியுடன் 100 ரன்களுக்கு மேல் பாட்நெர்ஷிப் போட்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றி தேடி தந்தார். பகுதி நேர பந்துவீச்சாளராகவும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட் எடுக்கக்கூடியவர்.

#6 தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக் 
தினேஷ் கார்த்திக்

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருநாள் அணிக்கான வாய்ப்பு கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டது. தனக்கான பங்கை சிறப்பாக செய்த கார்த்திக், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இக்கட்டான சமயத்தில் பொறுமையாக விளையாடி அணிக்கு தேவையான ரன்களை சேர்த்தார். குறைந்த போட்டிகளே இந்தியாவிற்கு விளையாடிருந்தாலும் இவரது அனுபவம் நிச்சயம் அணிக்கு பலம். அடுத்து வரும் நியூஸிலாந்து தொடரிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#7 விஜய் ஷங்கர்

விஜய் ஷங்கர் 
விஜய் ஷங்கர்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் விஜய் ஷங்கர். இந்தியா ஏ(A) அணிக்கு சிறப்பாக விளையாடிய காரணத்தால் பாண்டியாவிற்கு மாற்று வீரராக அறிவிக்க்கப்பட்டு ஆடும் XI ல் இடம் பிடித்தார். பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத போதிலும் தனது பௌலிங் மூலம் இவருக்கான தேர்வை பதிவு செய்தார். நியூஸிலாந்து மண்ணில் இந்தியா ஏ அணிக்கு விளையாடிய அனுபவம் உள்ளதால், இவருக்கான இடம் ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

#8 புவனேஸ்வர் குமார்

புவனேஸ்வர் குமார்
புவனேஸ்வர் குமார்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முழு திறமையை வெளிப்படுத்த தவறிய புவனேஸ்வர் குமார், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதை மாற்றினார். 3 ஒருநாள் கொண்ட தொடரில் 8 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். பும்ரா இல்லாத போதிலும் பொறுப்பை உணர்ந்து பந்து வீச்சாளர்களை முன்னின்று வழிநடத்தினார். நியூஸிலாந்து ஆடுகளம் பெரும்பாலும் ஸ்விங் பௌலர்களுக்கு சாதகமாக அமையும் என்பதால், இவரின் விக்கெட் வேட்டை தொடர அதிக வாய்ப்புள்ளது.

#9 குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ் 
குல்தீப் யாதவ்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 வது போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட குல்தீப், இந்திய அணியின் தவிர்க்க முடியாத சூழல் பந்து வீச்சாளராக வளர்ந்துவிட்டார். சிறப்பாக பந்து வீசியும் அதிக விக்கெட்களை இவரால் வீழ்த்த முடியவில்லை. இரண்டவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் இவரது பந்துவீச்சை பௌண்டரிக்கு விளாசினர். இருப்பினும் இவருக்கு நியூஸிலாந்து மண்ணில் வாய்ப்பு வழங்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

#10 முஹம்மத் ஷமி

முஹம்மத் ஷமி
முஹம்மத் ஷமி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் இழந்த பார்மை மீண்டார் ஷமி. 28 வயதான இவர், ஒருநாள் அணியில் இருந்து தொடர்ந்து ஒதுக்கிவைக்கப்பட்டார். பும்ராஹ் விளையாடாத காரணத்தால் ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை மூன்று போட்டியிலும் இருக்க பிடித்துக்கொண்டார். சிறப்பாக பந்து வீசிய இவர், 5 விக்கெட்களை வீழ்த்தினார். நியூஸிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசினால் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிக்கலாம்.

#11 சாஹல்

சாஹல்
சாஹல்

முதல் இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பங்கேற்காத சாஹல், மூன்றாவது போட்டியில் குல்தீப் யாதாவிற்கு பதிலாக வாய்ப்பு பெற்றார். இவரது சூழல் வலையில் சிக்கிக்கொண்ட ஆஸ்திரேலிய அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. வெறும் 42 ரன்கள் மட்டுமே வழங்கி 6 விக்கெட் எடுத்தார் சாஹல். ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுத்த சூழல் பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.வில்லியம்சன், டெய்லர் போன்ற வீரர்களை சமாளிக்க இவரது லெக் ஸ்பின் உறுதுணையாக இருக்கும்.

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications