நியூசிலாந்து vs இந்தியா 2019: இரண்டாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்

Two captain's during toss
Two captain's during toss

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் வென்று 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி பே ஓவல் மைதானத்தில் இன்று ( ஜனவரி 26) இந்திய நேரப்படி காலை 7:30 ற்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் இன்றி வீரர்கள் களமிறங்கினர். நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னருக்கு பதிலாக ஸ்சொதி களமிறங்கினார், டிம் சௌதி-க்கு பதிலாக காலின் டி கிரான்ட் ஹாம் களமிறங்கினார்.

இந்திய இன்னிங்ஸை தொடங்க ரோகித் சர்மா மற்றும் தவான் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் பந்திலேயே ரோகித் சர்மா கேட்சை மார்டின் கப்தில் விட்டுவிட்டார். அந்த பால் பவுண்டரியை நோக்கி சென்றது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் பங்களிப்பில் பவர் பிளே ஓவரில் இந்திய அணிக்கு 56 ரன்கள் வந்தது. 18 ஓவர் முடிவில் ரோகித்-தவான் பார்ட்னர் ஷிப்பில் 100 ரன்கள் வந்தது. அத்துடன் ரோகித் சர்மா-வின் 38வது சர்வதேச ஓடிஐ அரைசதமும் வந்தது. இதுவரை ரோகித்-தவான் பங்களிப்பில் 14 முறை 100 ரன்கள் பார்ட்னர் ஷிப் செய்யப்பட்ட உள்ளது. 21வது ஓவரின் 4வது பந்தில் தவானின் அரைசதமும் வந்தது. இந்த அரைசதம் அவருக்கு 27வது சர்வதேச அரைசதம் ஆகும். 25வது ஓவரின் இரண்டாவது பந்தில் ரோகித்-தவான் பார்ட்னர் ஷிப்பில் 150 ரன்கள் வந்தது.

Rohit-Dhawan
Rohit-Dhawan

அருமையாக விளையாடி வந்த தவான் , டிரென்ட் போல்ட் வீசிய 26வது ஓவரின் 2வது பந்தில் டாம் லேதமிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 67 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளுடன் 66 ரன்களை அடித்தார். 26 ஓவர்கள் பிடித்து 154 ரன்கள் ரோகித்- தவான் பார்ட்னர் ஷிப்பில் மொத்தமாக வந்தது. டிரென்ட் போல்டின் இந்த விக்கெட்டின் மூலம் அவருக்கு மொத்த சர்வதேச விக்கெட்டுகள் 400 வந்தது. தவான் விக்கெட்டிற்குப் பிறகு விராட் கோலி களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா , லாக்கி பெர்குஸன் வீசிய 30வது ஓவரின் 3வது பந்தில் காலின் டி கிரான்ட் ஹம்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 96 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸருடன் 87 ரன்களை அடித்தார். பின்னர் ராயுடு களமிறங்கினார்.

Virat Kohli
Virat Kohli

டிரென்ட் போல்ட் வீசிய 40வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி ஸ்சோதி-யிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 45 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் 43 ரன்களை அடித்தார். கோலி - ராயுடு பார்ட்னர் ஷிப்பில் இந்திய அணிக்கு 64 ரன்கள் வந்தது. இதுவரை இந்திய-நியூசிலாந்து ஒருநாள் தொடர்களில் அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் விராட் கோலி 1242 ரன்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்தார். பின்னர் தோனி களமிறங்கினார்.

Rayudu
Rayudu

நிதானமாக விளையாடிய ராயுடு , லாக்கி பெர்குஸன் வீசிய 46வது ஓவரின் 4வது பந்தில் காட்டன் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 49 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 47 ரன்களை அடித்தார். பின்னர் கேதார் ஜாதவ் களமிறங்கினார். கடைசி 4 ஓவரில் கேதார் ஜாதவ் மற்றும் தோனி இணைந்து அருமையான பார்ட்னர் ஷிப்பை உருவாக்கி 53 ரன்களை குவித்தனர். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 324 ரன்கள் எடுத்தது. கேதார் ஜாதவ் 22 ரன்களுடனும் , தோனி 48 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் டிரென்ட் போல்ட் , லாக்கி பெர்குஸன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

MSD
MSD

325 என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் மற்றும் காலின் முன்ரோ களமிறங்கினர். புவனேஸ்வர் குமார் முதல் ஓவரை வீசினார். அவருடன் முதல் பவர்பிளே-வில் முகமது ஷமி வீசினார். புவனேஸ்வர் குமார் வீசிய 5வது ஓவரின் கடைசி பந்தில் மார்டின் கப்தில் , யுஜ்வேந்திர சகாலிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 16 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 15 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய கானே வில்லியம்சன் அதிரடியாக விளையாடி வந்தார். முகமது ஷமி வீசிய 8வது ஓவரின் 5வது பந்தில் கானே வில்லியம்சன் 20 ரன்களில் போல்ட் ஆனார். சகால் வீசிய15வது 3வது பந்தில் காலின் முன்ரோ 31 ரன்களில் எல்.பி.டபுள்யு ஆனார். கேதார் ஜாதவ் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் ரோஸ் டெய்லர் 22 ரன்களில் , தோனியிடம் ஸ்டம்ப் ஹிட் ஆனார்.

Kuldeep yadhav
Kuldeep yadhav

பின்னர் சற்று நிலைத்து ஆடிய டாம் லேதம். 25வது ஓவரின் 3வது பந்தில் குல்தீப் யாதவ் வீசிய சுழலில் எல்.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 32 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 34 ரன்களை எடுத்தார். 27வது ஓவரின் குல்தீப் யாதவ் வீசிய கடைசி பந்தில் காலின் டி கிரான்ட் ஹாம் 3 ரன்களில் ராயுடு-விடம் கேட்ச் ஆனார். 31வது ஓவரில் குல்தீப் வீசிய 4வது பந்தில் ஹன்றி நிக்கோல்ஸ் 28 ரன்களில் ஷமியிடம் கேட்ச் ஆனார். அடுத்த பந்திலேயே ஸ்சோதி-யும் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆனார்.

Dough Bracewell
Dough Bracewell

சற்று நிலைத்து ஆடிய டோங் பிரேஸ்வெல் 37வது ஓவரின் 5வது பந்தில் தனது முதல் சர்வதேச அரை சதத்தை அடித்தார். புவனேஸ்வர் குமார் வீசிய 40வது ஓவரின் 4வது பந்தில் டோங் பிரேஸ்வெல் தவானிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 46 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்களை அடித்தார்.சகால் வீசிய 41வது ஓவரின் 2வது பந்தில் லாக்கி பெர்குஸன் 12 ரன்களில் விஜய் சங்கர்-ரிடம் கேட்ச் ஆகி நியூசிலாந்து அணி தனது கடைசி விக்கெட்டையும் இழந்தது. நியூசிலாந்து அணி 41 ஓவரை எதிர்கொண்டு 234 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் , புவனேஸ்வர் குமார், சகால் தலா 2 விக்கெட்டுகளையும் , கேதார் ஜாதவ் , முகமது ஷமி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

மூன்றாவது ஒருநாள் போட்டி ஜனவரி 28 அன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Quick Links

App download animated image Get the free App now