இந்திய அணி நியூசிலாந்திற்கு எதிராக 3 டி20 போட்டிகள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதன் முதல் டி20 யில் நியூசிலாந்து அணி வென்றது. இரண்டாவது டி20 இன்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி 11:30ற்கு தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளும் எவ்வித மாற்றமும் இன்றி களமிறங்கினர்.
டிம் செய்ஃபெர்ட் மற்றும் காலின் முன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களளாக களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார்.2.3 வது ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில் டிம் செய்ஃபெர்ட் 12 ரன்களில் தோனியிடம் கேட்ச் ஆனார். அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட காலின் முன்ரோவும் 5.2வது ஓவரில் க்ருனால் பாண்டியா வீசிய பந்தில் 12 ரன்களில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் ஆனார். அதே ஓவரின் 6வது பந்தில் டார்ல் மிட்செல் எல.பி.டபுள்யு ஆனார். பவர்பிளே(1-6 ஓவர்கள்) ஓவரில் நியூசிலாந்து அணி மொத்தமாக 3 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.
7.5வது ஓவரில் க்ருனால் பாண்டியா வீசிய பந்தில் நியூசிலாந்து கேப்டன் கானே வில்லியம்சன் 20 ரன்களில் எல்.பி.டபுள்யு ஆனார். பின்னர் களமிறங்கிய ராஸ் டெய்லர் மற்றும் காலின் டி கிரான்ட் ஹாம் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர்.15.3 வது ஓவரில் காலின் டி கிரான்ட் ஹாம் தனது முதல் சர்வதேச டி20 அரை சதத்தை அடித்தார். அடுத்த பந்திலேயே ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் ரோகித் சர்மா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 28 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 50 ரன்களை அடித்தார். இவர்களது பார்ட்னர் ஷிப்பில் நியூசிலாந்து அணிக்கு 77 ரன்கள் வந்தது.
நிதானமாக விளையாடி வந்த ராஸ் டெய்லர் 18.6வது ஓவரில் விஜய் சங்கர்-ரிடம் ரன் அவுட் ஆனார். இவர் மொத்தமாக 36 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 42 ரன்களை அடித்தார்.19.2வது ஓவரில் கலீல் அகமது வீசிய பந்தில் மிட்செல் சான்டனர் 7 ரன்களில் போல்ட் ஆனார்.அதே ஓவரின் கடைசி பந்தில் டிம் சௌதி 3 ரன்களில் போல்ட் ஆனார். 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
160 என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித்-தவான் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். 3.6 வது ஓவரில் ரோகித் சர்மா அடித்த சிகஸரின் மூலம் சர்வதேச டி20யில் அதிக சிக்ஸர்கள் அடித்தோர் பட்டியலில் ரோகித் 2வது இடத்தை பிடித்தார். இவர் 100 சிக்ஸர்கள் சர்வதேச டி20யில் அடித்துள்ளார். அத்துடன் சர்வதேச டி20யில் அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் இதுவரை சர்வதேச டி20யில் 2277 ரன்களை அடித்துள்ளார். 8.5வது ஓவரில் ரோகித் சர்மா தனது 16வது அரை சதத்தை அடித்தார். டி20யில் 50 ரன்களுக்கு மேலாக ரன்கள் எடுத்தோர் பட்டியலில் முதல் இடம் பிடித்தார் ரோகித் சர்மா. 20 முறை 50 ற்கும் மேலாக ரன்களை குவித்துள்ளார் ரோகித் சர்மா.
9.2வது ஓவரில் சோதி வீசிய பந்தில் ரோகித் சர்மா , டிம் சௌதியிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 29 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 50 ரன்களை அடித்தார். ஸசோதியின் இந்த விக்கெட் மூலம் இந்திய அணிக்கு எதிராக டி20 அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் உமர் குல்லுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார். 10.5வது ஓவரில் லாக்கி பெர்குஸன் வீசிய பந்தில் தவான் , காலின்-டி-கிரான்ட் ஹம்மிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 31 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 30 ரன்களை அடித்தார்.
13.4வது ஓவரில் டார்ல் மிட்செல் வீசிய பந்தில் , விஜய் சங்கர் , டிம் சௌதியிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 8 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 14 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய ரிஷப் பன்ட் மற்றும் தோனி இலக்கை எட்டி ஆட்டத்தை முடித்து வைத்தனர். தோனி 40 ரன்களுடனும் , தோனி 20 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-1 என தொடரை சமன் செய்துள்ளது. க்ருநால் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
மூன்றாவது மற்றும் தொடரை தீர்மானிக்கும் போட்டியானது ஹமில்டனில் பிப்ரவரி 10 அன்று நடைபெறவுள்ளது.