நியூசிலாந்து vs இந்தியா 2019: மூன்றாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்

Two captain's during toss
Two captain's during toss

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வென்று 2-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி பே ஓவல் மைதானத்தில் இன்று ( ஜனவரி 28) இந்திய நேரப்படி காலை 7:30 ற்கு தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தோனிக்கு தோல் பட்டை ஏற்பட்ட வலியின் காரணமாக அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். விஜய் சங்கர்-ருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். நியூசிலாந்து அணியில் காலின் டி கிரான்ட் ஹாம்-ற்கு பதிலாக மிட்செல் சான்ட்னர் களமிறங்கினார்.

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்தில் மற்றும் காலின் முன்ரோ களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். அவருடன் முதல் பவர்பிளே-வில் முகமது ஷமி வீசினார். முகமது ஷமி வீசிய 2வது ஓவரின் 5வது பந்தில் காலின் முன்ரோ 7 ரன்களில் , ரோகித் சர்மா-விடம் கேட்ச் ஆனார். புவனேஸ்வர் குமார் வீசிய 7வது ஓவரின் முதல் பந்தில் மார்டின் கப்தில் 13 ரன்களில் , தினேஷ் கார்த்திக்-டம் கேட்ச் ஆனார். நியூசிலாந்து அணி முதல் பவர் பிளே-வில் (1-10 ஓவர்கள்) 2 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்களை எடுத்திருந்தது.

Bhuvi
Bhuvi

சகால் வீசிய 17வது ஓவரின் 2வது பாலில் , நிலைத்து விளையாடிய கானே வில்லியம்சன் ஹர்திக் பாண்டியா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 48 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய ரோஸ் டெய்லர் மற்றும் டாம் லேதம் சற்று நிலைத்து விளையாட தொடங்கினர். 26வது ஓவரில் நியூசிலாந்து அணிக்கு 100 ரன்கள் வந்தது. 27வது ஓவர் முடிவில் ராஸ் டெய்லர் மற்றும் டாம் லேதம் பங்களிப்பில் 50 ரன்கள் வந்தது.

Ross Taylor - Tom Latham
Ross Taylor - Tom Latham

பொறுமையாக விளையாடிய ராஸ் டெய்லர் 32வது ஓவரின் 3வது பாலில் பவுண்டரியை விளாசி தனது 46வது அரைசதத்தை விளாசினார். 35வது ஓவர் முடிவில் ராஸ் டெய்லர் மற்றும் டாம் லேதம் பங்களிப்பில் 100 ரன்கள் வந்தது.38வது ஓவரின் முதல் பந்தில் டாம் லேதம் தனது 13வது சர்வதேச ஓடிஐ அரைசதத்தினை விளாசினார். சகால் வீசிய 38வது ஓவரின் 3வது பந்தில் டாம் லேதம் ,ராயுடு-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 64 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 51 ரன்கள் அடித்தார்.அதன் பின் ஹேன்றி நிக்கோல்ஸ் களமிறங்கினார்.

Chahal
Chahal

ஹர்திக் பாண்டியா வீசிய 40வது ஓவரின் 3வது பந்தில் நிக்கோல்ஸ் 6 ரன்களில் தினேஷ் கார்த்திக்-டம் கேட்ச் ஆனார். ஹர்திக் பாண்டியா வீசிய 42வது ஓவரின் 3வது பந்தில் மிட்செல் சான்ட்னர் 3 ரன்களில் தினேஷ் கார்த்திக்-டம் கேட்ச் ஆனார். நிலைத்து விளையாடிய ராஸ் டெய்லர் , முகமது ஷமி வீசிய 45 ஓவரின் முதல் பந்தில் தினேஷ் கார்த்திக்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 106 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளுடன் 93 ரன்களை அடித்தார். முகமது ஷமி வீசிய 48வது ஓவரின் கடைசி பந்தில் ஸ்சோதி 13 ரன்களில் விராட் கோலி-யிடம் கேட்ச் ஆனார். புவனேஸ்வர் குமார் வீசிய 49ஓவரின் முதல் பந்தில் டாங் பிரேஸ்வெல் 15 ரன்களில் விராட் கோலி-யிடம் ரன் அவுட் ஆனார். அதே ஓவரின் கடைசி பந்தில் டிரென்ட் போல்ட் 2 ரன்களில் முகமது ஷமி-யிடம் கேட்ச் ஆனார். நியூசிலாந்து அணி 49 ஓவரை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் , ஹர்திக் பாண்டியா , சகால், புவனேஸ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Shami
Shami

245 என்ற இலக்குடன் இந்திய தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, தவான் களமிறங்கினர்.ஆட்டத்தின் முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். டிரென்ட் போல்ட் வீசிய 9வது ஓவரின் 2வது பந்தில் தவான் ராஸ் டெய்லர்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 27 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 28 ரன்களை அடித்தார். ராஸ் டெய்லரின் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 134 கேட்சுகளை பிடித்துள்ளார். ஓடிஐயில் அதிக கேட்சுகளை பிடித்தோர் பட்டியலில் 5வது இடத்தை பிடித்தார். நியூசிலாந்து வீரர்களில் முதல் இடத்தை பிடித்தார். பின்னர் களமிறங்கிய விராட் கோலி, ரோகித் சர்மா-வுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை மேற்கொண்டார்.

Kholi-rohit
Kholi-rohit

ரோகித் சர்மா 23வது ஓவரின் 3வது பந்தில் தன்னுடைய 39வது சர்வதேச அரைசதத்தை விளாசினார். 23வது ஓவரில் ரோகித் அடித்த சிக்ஸரின் மூலம் இந்திய அணியில் அதிக சிக்ஸர்கள் அடித்தோர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். ரோகித் ஒருநாள் போட்டிகளில் இதுவரை 215 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 28வது ஓவரின் முதல் பாலில் விராட் கோலி தனது 49வது ஓடிஐ அரைசதத்தினை விளாசினார்.அத்துடன் கோலி-ரோகித் பங்களிப்பில் 100 ரன்கள் வந்தது. இதுவரை 16முறை 100 ரன்கள் பார்ட்னர் ஷிப்பை ரோகித்-கோலி செய்துள்ளர்.

Rayudu- DK
Rayudu- DK

மிட்செல் சான்ட்னர் வீசிய 29 ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா டாம் லேதம்-டம் ஸ்டம்ப் ஹிட் ஆனார். இவர் மொத்தமாக 77 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்களை அடித்தார். 31வது ஓவரில் டிரென்ட் போல்ட் வீசிய பந்தில் விராட் கோலி , ஹன்றி நிக்கோல்ஸ்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 74 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 60 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய ராயுடு-தினேஷ்கார்த்திக் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். 40 ஓவர் முடிவில் இவர்களின் பார்ட்னர் ஷிப்பில் 50 ரன்கள் வந்தது. ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் கடைசி வயை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். ராயுடு 40 ரன்களும் , தினேஷ் கார்த்திக் 38ரன்களையும் குவித்தனர். இந்த வெற்றியின் மூலம் 5ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-0 என தொடரை கைப்பற்றியது.

முகமது ஷமி ஆட்டநாயகன் விருதினை வென்றார். 4வது ஒருநாள் போட்டி ஹிமில்டன் மைதானத்தில் ஜனவரி 31அன்று நடைபெறவுள்ளது.

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications